Vishal: விஜய்க்கே நோ சொல்லிட்டேன்.. சிவகார்த்திகேயனுக்கு நான் வில்லனா?.. விஷால் நச் பதில்!

சென்னை: நடிகர் விஷால் அடுத்தடுத்து படங்களில் தன்னை இணைத்து வருகிறார். தொடர்ந்து 20 ஆண்டுகளாக தமிழில் இவர் ஹீரோவாக நிலைத்து வருகிறார். இடையில் சில படங்கள் சொதப்பினாலும் இவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகச்சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

ஆனால் இந்தப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான ரத்னம் படமும் இவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் விஷால் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

vishal sivakarthikeyan sk25

நடிகர் விஷால்: நடிகர் விஷால் 20 ஆண்டுகளை கடந்த தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துவந்த விஷாலுக்கு கடந்த சில படங்கள் சரியாக கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த இவரது கேரியரில் சிறப்பாக அமைந்தது மார்க் ஆண்டனி படம். டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவுடன் கூட்டணி அமைத்து மாஸ் காட்டியிருந்தார் விஷால். படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். படம் வரவேற்பிலும் வசூலிலும் சிறப்பாக அமைந்தது.

ரத்னம் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் இணைந்திருந்த ரத்னம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இந்தப் படமும் விஷாலுக்கு சொதப்பலாகவே அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் விஷால் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லெஜண்ட் சரவணனை வைத்து துரை செந்தில்குமார் படமியக்கி வருகிறார். இநத்ப் படத்தை தொடர்ந்து விஷாலுடன் அவர் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்கே25 படம்: இதனிடையே அடுத்ததாக சிவகார்த்திகேயன் -சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவுள்ள எஸ்கே25 படத்தில் வில்லனாக விஷால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தக் கேரக்டருக்கு படத்தில் மிகவும் முக்கியத்துவம் உள்ளதாகவும் ஸ்டைலிஷ் வில்லனாக இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கேரக்டருக்கு ஜெயம் ரவியையும் படக்குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்பட்டது. முன்னதாக இந்தக் கேரக்டருக்கு பகத் பாசில், நிவின் பாலியையும் படக்குழுவினர் அணுகிய நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர்களால் படத்தில் இணைய முடியவில்லை.

வில்லனாக நடிக்கவில்லை: இந்நிலையில் தான் எஸ்கே 25 படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகவில்லை என்று நடிகர் விஷால் பேட்டியொன்றில் கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக தான் சினிமாவில் ஹீரோவாக நடித்துவரும் நிலையில் வில்லனாக நடிக்க தான் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய படங்கள் மட்டுமே தனக்கு முக்கியம் என்றும் அதில்தான் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் விஷால் கூறியுள்ளார். இந்த தகவல் எங்கிருந்து கிளம்பியுள்ளது என்று தனக்கு தெரியும் என்றும் தன்னை வில்லனாக பார்க்க அவர்கள் விரும்புவதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கேள்வி: வில்லனாக நடிக்க தான் தயாராக இல்லை என்றும் அவர்கள் சில் செய்துக் கொள்வது நல்லது என்றும் விஷால் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது குறித்து வெளிப்படுத்தாத நிலையில், ரசிகர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக விஜயின் லியோ படத்தில் விஷால் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அவர் அதை மறுத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X