பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார்.. பரபரக்கும் கோலிவுட்!

சென்னை: தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் விஷால் படங்களையும் தயாரித்து வருகிறார்.

தற்போது எனிமி, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி செய்திகளிலும் அடிப்பட்டு வருகிறார் விஷால்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் விஷால் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கூறி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராமும் விஷாலை விளாசி டிவிட்டியிருந்தார்.

நின்று போன திருமணம்

நின்று போன திருமணம்

இதேபோல் நடிகைகளுடன் காதல், நின்று போன திருமணம் என விஷாலின் பெயர் செய்திகளில் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

பத்திரங்களை கொடுத்து

பத்திரங்களை கொடுத்து

அதாவது படத் தயாரிப்புக்காக நடிகர் விஷால் ஆர்பி சவுத்ரியிடம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக தன் வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில பத்திரங்களை ஆவணங்களாக கொடுத்ததாக தெரிகிறது.

விஷால் போலீஸில் புகார்

விஷால் போலீஸில் புகார்

இந்நிலையில் கடன் தொகையை செலுத்திய பிறகும் உறுதி மொழி பத்திரங்களை திருப்பித் தராததால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் விஷால் சார்பில் அவருடைய மேனேஜர் ஹரி புகார் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X