twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் முதல் படத்தின் ஒளிப்பதிவாளர்.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவால் மனம் உடைந்து போன விஷால்

    |

    சென்னை: இயக்குநர் கே.வி. ஆனந்தின் திடீர் மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் லால், அல்லு அர்ஜுன், தனுஷ், சூர்யா, விஷால் என ஏகப்பட்ட பிரபலங்களும் இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கொரோனா பாதிப்பு.. கார்டியாக் அரெஸ்ட்.. கேவி ஆனந்தின் மரணம்.. நடந்தது என்ன? கொரோனா பாதிப்பு.. கார்டியாக் அரெஸ்ட்.. கேவி ஆனந்தின் மரணம்.. நடந்தது என்ன?

    தமிழில் செல்லமே படத்தின் மூலம் ஹீரோவான விஷால், தனது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் காலமாகி விட்டார் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இயக்குநர் கே.வி. ஆனந்த் மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், மகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு சென்று வந்த இயக்குநர் கே.வி. ஆனந்துக்கு கொரோனா தொற்று பரவியதாகவும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயக்குநர் கே.வி. ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் பல பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    பிரபலங்கள் இரங்கல்

    பிரபலங்கள் இரங்கல்

    தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பணியாற்றிய இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவு செய்தியை அறிந்த இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், மோகன் லால், அல்லு அர்ஜுன், சூர்யா, தனுஷ், ஜீவா, காஜல் அகர்வால், அமைரா தஸ்துர், கார்த்திகா நாயர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    விஷால் இரங்கல்

    மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவு செய்தி கேட்டு முற்றிலுமாக உடைந்து போய் விட்டேன் என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இது எளிதில் கடந்து போய் விட முடியாத ஒன்று என்றும், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு சோகத்தில் உள்ளேன் என்றும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் பதிவிட்டுள்ளார்.

    செல்லமே படத்தில்

    செல்லமே படத்தில்

    இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் கே.வி. ஆனந்த். ஹீரோவாக நடிகர் விஷால் அறிமுகமான படம் செல்லமே படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது மற்றொரு ட்வீட்டில் தனது முதல் படமான செல்லமே படத்தின் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் என்றும் நடிகர் விஷால் குறிப்பிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Vishal completely shattered after hearing about the sudden demise of KV Anand. Actor Vishal’s debut movie Chellamae movie done by KV Anand as a cinematographer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X