twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபாய நிலையில் இருக்கும் திரைத்துறை… ஆக்ஸிஜன் கிடைக்கட்டும்… ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய விஷால் !

    |

    சென்னை : அபாய நிலையில் இருக்கும் திரைத்துறைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கட்டும் என்று முகஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    பேரும் புகழும் பெற வேண்டும்… முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து !பேரும் புகழும் பெற வேண்டும்… முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து !

    இதில் திமுக தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

    100 நாள் குறை தீர்க்கும் மனு

    100 நாள் குறை தீர்க்கும் மனு

    திமுகவின் இந்த வெற்றியின் மூலம் கூட்டணிக் கட்சிகளின் பலமும், ஒருங்கிணைத்த ஸ்டாலினின் தலைமைப் பண்பும் வெளிப்பட்டுள்ளது. திமுகவின் திட்டமிடப்பட்ட பிரச்சாரம், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக 100 நாளில் குறை தீர்க்கும் மனு வாங்கும் திட்டம், தேர்தல் அறிக்கை எனப் பல அம்சங்களைச் சொல்லலாம்.

    திமுக கூட்டணி முன்னிலை

    திமுக கூட்டணி முன்னிலை

    தமிழ்நாடு 234 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து ஒவ்வொரு தொகுதியாக வெற்றி அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    பலர் வாழ்த்து

    பலர் வாழ்த்து

    தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இவருக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

    நல்வரவு

    இந்நிலையில் நடிகரும் உதயநிதி ஸ்டாலின் நண்பருமான விஷால், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,அற்புதமான வெற்றியை எதிர்நோக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கும், வாழ்த்துக்கள்.நமது புதிய முதலமைச்சர் முகஸ்டாலினுக்கு நல்வரவு, அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகம் நல்ல விஷயங்களோடு முன்னேறட்டும், அபாய நிலையில் இருக்கும் திரைத்துறைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கட்டும் என கூறியுள்ளார்.

    English summary
    Actor Vishal Congratulates MK Stalin and Udhayanithistalin
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X