மற்றொரு பதிவுக்காக காமராஜர் பிறந்தநாள் பதிவை உடனடியாக நீக்கிய விஷால்.. வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்!

சென்னை: நடிகர் விஷால் மற்றொரு பதிவை ஷேர் செய்வதற்காக காமராஜர் பிறந்தநாள் குறித்து பதிவிட்ட டிவிட்டை உடனடியாக நீக்கியுள்ளார்.

Recommended Video

Vikram 60 • Combo Treat | Karthick Subburaj • Chiyan Vikram, Dhruv Vikram

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஷாலின் பெயர் ஏதாவது ஒரு செய்தியில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. துப்பறிவாளன் 2 படத்தில் இயக்குநர் மிஷ்கினுடன் பிரச்சனை ஏற்பட்டது.

மீண்டும் மிஷ்கின்

மீண்டும் மிஷ்கின்

இதனை தொடர்ந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். இதனை தொடர்ந்து மீதிப்படத்தை விஷாலே இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மீண்டும் இயக்குநர் மிஷ்கினை வைத்து படத்தை முடிக்க நடிகர் விஷால் விரும்புவதாக தகவல் வெளியானது.

45 லட்சம் கையாடல்

45 லட்சம் கையாடல்

இதனை தொடர்ந்து விஷாலின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் 45 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக விஷால் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காமராஜர் பிறந்தநாள்

காமராஜர் பிறந்தநாள்

அவ்வப்போது சர்ச்சைகளிலும் நடிகர் விஷாலின் பெயர் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் விஷாலின் பெயர் சிக்கியிருக்கிறது. கல்விக்கண் திறந்த காமராஜரின் 118ஆவது பிறந்த நாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உங்களைப் போன்று பார்ப்போமா?

உங்களைப் போன்று பார்ப்போமா?

இதனை முன்னிட்டு நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் காமராஜர் குறித்து டிவிட்டினார். உடனடியாக அந்த டிவிட்டை நீக்கிய விஷால். பின்னர் காமராஜரை புகழ்ந்து மற்றொரு பதிவை ஷேர் செய்தார். அதாவது முதலில் உங்களைப் போன்று யாராவது ஒருவரை எதிர்காலத்தில் பார்ப்போமா என கேள்வி குறியோடு பதிவிட்டிருந்தார் விஷால்.

மற்றொரு டிவிட்

மற்றொரு டிவிட்


பின்னர் அதனை நீக்கிவிட்டு மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்த மனிதர்.. இன்றுவரை நாங்கள் உங்களை மிஸ் பண்றோம்.. பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா என பதிவிட்டுள்ளார். நடிகர் விஷால் முதலில் பதிவிட்ட டிவிட்டை உடனடியாக டெலிட் செய்து விட்டார்.
இருப்பினும் அதன் ஸ்க்ரீன்ஷாட் வைரலாகி வருகிறது.

கடுப்பான விஷால்

கடுப்பான விஷால்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது வேட்புமனு தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் கடுப்பான விஷால் பலரையும் குற்றம்சாட்டினார்.

மதிய உணவு திட்டம்

மதிய உணவு திட்டம்

தற்போது காமராஜர் குறித்து நடப்பு அரசியலை வைத்து ஏதோ சொல்ல நினைத்துள்ளார். பின்னர் அதனை நீக்கிவிட்டு அவர் கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்றான மதிய உணவுத் திட்டத்தை புகழ்ந்து டிவிட்டியுள்ளார் நடிகர் விஷால்.

Read more about: vishal tweet விஷால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X