Vishal 34 :விஷாலை இயக்கும் டைரக்டர் ஹரி.. யாரு தயாரிப்பு தெரியுமா?
சென்னை : விஷால் மற்றும் இயக்குநர் ஹரி காம்பினேஷனில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை வெற்றிப் படங்கள் வெளியான நிலையில், இந்த காம்பினேஷன் மீண்டும் இணையவுள்ளது.
ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படம் தற்காலிகமாக விஷால் 34 என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மார்க் ஆண்டனி படத்தை முடித்துக் கொடுத்துள்ள விஷால், அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

விஷால் -ஹரி கூட்டணியில் புதிய படம் : நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் முன்னதாக வெளியான தாமிரபரணி, பூஜை படங்கள், விஷால் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்த படங்கள். இரண்டு படங்களும் சிறந்த வெற்றியை அவருக்கு கொடுத்தன. இந்நிலையில் இந்த காம்போ மீண்டும் விஷாலின் 34வது படத்தில் இணையவுள்ளது. இந்தக் கூட்டணி இணைந்து மிகச்சிற்நத வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கையெழுத்தும் போடப்பட்டுள்ளது.
முன்னதாக தாமிரபரணி, பூஜை படங்களின் பாடல்களும் யுவன் இசையில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் இந்தப் படத்திலும் அவர் கூட்டணி அமைப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது மார்க் ஆண்டனி படத்தின் சூட்டிங் முடித்துக் கொடுத்துள்ளார் விஷால், இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் ஆகியோரும் விஷாலுடன் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய விஷால், மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மார்க் ஆண்டனியை தொடர்ந்து அடுத்ததாக அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டே ஹரியுடன் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அவரது துப்பறிவாளன் 2 படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வரும் செப்டம்பர் மாதத்தில் விஷால் 34 படத்தின் சூட்டிங் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டோன்பென்ச்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டெதஸ்கோப்பை சுற்றி, அரிவாள், கத்தி, கைவிலங்கு, துப்பாக்கிகள் காணப்படுவதாக அந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஹரியின் சம்பவம் தற்போதே லோடிங் என்பதையே இந்த போஸ்டர் சுட்டிக் காட்டுகிறது.
படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் யுவனும் இணைந்தால் மாஸ் காட்டும் வகையில் படம் இருக்கும். முன்னதாக விஷாலின் வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் ஆக்ஷன், அதிரடி என அனைத்திலும் சிறப்பாக அமைந்திருந்தபோதிலும் எதிர்பார்த்த வெற்றியை படக்குழுவினருக்கு கொடுக்கவில்லை. இந்நிலையில், விஷாலின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











