நடிகர் விஷால் ரசிகர்கள் நலிவடைந்தவர்களுக்கு உதவி.. குவியும் பாராட்டு!

சென்னை : நடிகர் விஷால் சார்பாக நலிவடைந்த மக்களுக்கு அவரது ரசிகர்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் அனைவரும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்க பட்டுள்ளனர். இந்த நிலையில் ஏழை மக்களுக்கு பல துறைகளில் இருந்தும் உதவிகள் செய்து கொண்டு வருகின்றனர் ..

Actor Vishal fans provides rice bags and other things to the poor people

இந்நிலையில் நடிகர் விஷால் அவர்களது தேவி அறக்கட்டளை மூலம் தத்தெடுத்த தஞ்சாவூர் மாவட்டம் கார்காவயல் கிராம மக்களுக்கும், நலிவடைந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், துணை இயக்குனர்கள், திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்களுக்கும் நிவாரண உதவி பொருட்களை வழங்கினர்.

Actor Vishal fans provides rice bags and other things to the poor people

மேலும், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கும் தேவையான மளிகை சாமான்களை வழங்கினர். மேலும், தூய்மை பணியாளர்களுக்கு தங்கள் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ள வசதியாக முகக்கவசம் மற்றும் கை உறை போன்றவற்றை வழங்கி உதவி வருகின்றனர்.

Actor Vishal fans provides rice bags and other things to the poor people

இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் செய்துவருகிறார், விஷால் அவர்களின் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றார்கள்.

Actor Vishal fans provides rice bags and other things to the poor people

இந்த ஊரடங்கின் இக்கட்டான சூழ்நிலையில் நடிகர்கள், இயக்குனர்கள் மட்டும் அல்லாமல் பல திரையுலக பிரபலங்களும் பல உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த உதவிகளை தொடர்ந்து நடிகர் விஷாலின் ரசிகர்களும் உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து பரவலாக பகிரப்பட்டது. உதவி செய்யும் அனைவருக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X