Vishal: ஹரி படத்துக்கு அப்புறமா மீண்டும் டைரக்ஷன்தான்.. வெளியானது விஷாலின் பிளான்!
சென்னை: நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ளார் விஷால். இந்தப் படத்திற்கு ரத்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
படத்தின் டீசர், போன்றவை வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகர் விஷால்: நடிகர் விஷாலின் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான மார்க் ஆண்டனி அவருக்கு மிகச்சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். படம் டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிறப்பான விமர்சனங்களை மட்டுமில்லாமல் நல்ல வசூலையும் படம் பெற்று தந்துள்ளது.
ரத்னம் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் தன்னுடைய விஷால் 34 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ரத்னம் என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் 2வது லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் கோடை கொண்டாட்டமாக அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டும் போஸ்டர்கள்: தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது வெளியாகியுள்ள டைட்டில் டீசரும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு இந்தப் படம் செம ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக டாக்டர்களின் ஸ்டெத் மற்றும் அரிவாள், துப்பாகி சகிதம் போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு கையில் அரிவாளுடன் மறுகையில் வெட்டப்பட்ட தலையுடன் விஷால் காணப்படும் போஸ்டர் வெளியாகியுள்ளது.
துப்பறிவாளன் 2 படம்: இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை துரிதப்படுத்தவுள்ளார் இயக்குநர் ஹரி. மேலும் அடுத்தடுத்து இசை வெளியீடு உள்ளிட்டவற்றிற்கும் படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விஷாலின் அடுத்தப்படம் குறித்த கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இடையில் நின்றுப்போன துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கவுள்ளதாக விஷால் அறிவித்திருந்தார்.
துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் விஷால்: இந்நிலையில் ரத்னம் படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தை இயக்கவுள்ளாராம் விஷால். இதற்கான முன்தயாரிப்பு பணிகளையும் அவர் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சென்சார் போர்ட் குறித்த வழக்கு விசாரணைக்காக மும்பை சென்ற விஷால், அங்கு சில சினிமா நடிகர்களை சந்தித்து தன்னுடைய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார் விஷால். இதன்மூலம் படத்தை பான் இந்தியா படமாக அவர் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் துப்பறிவாளன் 2 குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
ரசிகர்கள் உற்சாகம்: முதல் பாகத்தை போலவே இந்தப் படத்தையும் இயக்குநர் மிஷ்கினை வைத்தே துவங்கினார் விஷால். லண்டனில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். இதையடுத்து இந்தப் படத்தை தானே இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் விஷால். இந்நிலையில் விரைவில் அவர் துப்பறிவாளன் 2 படத்தின் இயக்கத்தில் இணையவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.
Actor Vishal going to direct Thupparivaalan 2 movie: நடிகர் விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படம் கோடை கொண்டாட்டமாக அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து விரைவில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால்.


Click it and Unblock the Notifications











