துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப்போவது யார்? நடிகர் விஷால் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! #Thupparivaalan2
சென்னை: துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக நடிகர் விஷால் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, வினய், பாக்கியராஜ், அனு இமானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.

நல்ல வரவேற்பு
துப்பறிவாளன் பெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணி தொடங்கியது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடித்தனர்.

நீக்கப்பட்ட மிஷ்கின்
இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பபட்டார். இந்தப் படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானதால் படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின், முக்கால்வாசி படத்திற்கு பிறகு நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஷால் அறிக்கை
இதையடுத்து எஞ்சியிருக்கும் படத்தை விஷாலே இயக்குவதாக தகவல் வெளியானது. விஷால் - மிஷ்கின் இடையேயான இந்த பிரச்சனையை தமிழ் சினிமாவில் உற்று நோக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தை தானே இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஷால். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

சிறந்ததை செய்ய
மேலும் இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததை செய்ய விரும்புகிறேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலின் இந்த அறிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











