Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லத்தி படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான விஷால்.. ஷூட்டிங் பாதியில் நிறுத்தம் !
சென்னை : லத்தி படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் விபத்துக்குள்ளானதால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படமாக லத்தி உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் வினோத் குமார் லத்தி படத்தை இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் லத்தி படம் வெளியாகவுள்ளது.
கையில் சரக்கு பாட்டிலுடன் மிரட்டும் ராகவா லாரன்ஸ்.. ருத்ரன் ரிலீஸ் எப்போ தெரியுமா?
லத்தி
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி, வீரமே வாகை சூடவா போன்ற படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் லத்தி. இப்படத்தை ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது நடிகர் விஷால் கையில் காயம் ஏற்பட்டது. இதனால், லத்தி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது. பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
விறுவிறுப்பான சண்டைகாட்சி
லத்தி படத்தில் மீண்டும் ஒரு சண்டைக் காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்பதால், இரவு பகலாக சண்டை காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகிறார். அதில், கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு விஷால் செல்கிறார். அப்போது விஷாலை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை தாக்குகின்றனர்.
காலில் காயம்
அப்போது விஷால், தைரியமாக கீழே இறங்கி அவர்களை அடித்து தாக்கி கொண்டு கைதியை பிடித்து செல்கிறார். இந்த காட்சியில், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்குவது போல காட்சி படமாக்கப்பட்டு வந்தது. இந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக காலில் அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார் விஷால். உடனே அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால், லத்தி படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
லத்தி படப்பிடிப்பு ரத்து
விஷாலை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றும், பிசியோ தரப்பி செய்தால் சரியாகி விடும் என்றும் கூறினர். நாளை மீண்டும் பரிசோதிக்கப்பட்டு வலி இல்லையென்றால் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. விஷால் விபத்தில் சிக்கியதாக தகவல் பரவியதை அடுத்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.