கபாலீஸ்வரர் கோவிலுக்கு சைக்கிளில் வந்தது ஏன்? விஷால் சொன்ன அந்த விஷயம்..மனுஷன் தங்கமய்யா

சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் வெளியான நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் விஷால் உடல்நிலை சரியில்லாமல் கை நடுங்கியபடி பேசியது பெரும் புயலை கிளப்பி பெரும் பேசுபொருளானது. தற்போது கோயிலுக்கு வந்துள்ள விஷால்,4 கோடி ரூபாய் இருந்தா படம் எடுக்க வராதீங்க.. சல்லி பைசா வராது செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷால்,அஞ்சலி, வரலட்சமி நடித்த மதகஜராஜா திரைப்படம், 12 வருடங்களுக்கு பின் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. படம் தமதமாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு கிடைத்து இருப்பது, கிடப்பில் இருக்கும் மற்ற பல படங்களுக்கு உத்வேகத்தை கொடுத்து இருக்கிறது. கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் உட்பட பல படங்களும் அதனால் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

actor vishal madhagajaraja

சைக்கிளில் வந்த விஷால்: இந்நிலையில், நடிகர் விஷால் நேற்றிரவு திடீரென சைக்கிளில் மாஸ்க் அணிந்துக்கொண்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கபாலீஸ்வரர் கோவிலில் எனக்கு ஒரு வேண்டுதல் இருந்தது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதகஜராஜா திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாமிகிட்ட நான் ஒரு வேண்டுதல் வைத்திருந்தேன் அதை நிறைவேறிவிட்டது. நானே எதிர்பார்க்கவில்லை பன்னிரண்டு வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் நன்றாக வசூலை அள்ளும் என்று அது நிறைவேற்றி விட்டதால் என்னுடைய வேண்டுதலை நிவர்த்தி செய்து கொண்டு இருக்கிறேன் அதற்காகத்தான் வந்தேன். சைக்கிளில் வந்தால், டிராப்பிக்கில் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, சின்ன தெருவாக இருந்தாலும் வந்துவிடலாம் என்பதற்காக சைக்கிளில் வந்தேன் என்றார்.

தயவு செய்து படம் எடுக்க வரவேண்டாம்: ஒரு கோடியில் இருந்து நான்கு கோடி வரை பணம் வைத்திருப்பவர்கள் தயவுசெய்து படத்தை எடுப்பதற்காக சினிமாவிற்கு வரவேண்டாம். ஏனென்றால் சினிமா மிகவும் மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை நான் சொன்ன போது அனைவரும் என்னை வில்லனாக பார்த்தார்கள். ஆனால், நான் சொல்வதுதான் உண்மை. தயவுசெய்து அந்த பணத்தை வைத்துக்கொண்டு படம் எடுக்க வேண்டாம். அந்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்யுங்கள், இல்லை என்றால் உங்கள் குழந்தைகளுக்காக பிக்சட் டெபாசிட் போட்டு வையுங்கள். இதை யாரும் சொல்ல மாட்டார்கள் நான் உங்களுக்கு சொல்கிறேன் தயவுசெய்து நல்ல பாதையில் செல்லுங்கள் என்று பேசி இருந்தர். இதற்கு முன்பு மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இதே கருத்தைத்தான் விஷால் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X