Vishal: விஜய் என்ற அரசியல்வாதியை வரவேற்கிறேன்.. ஆனா.. விஷால் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விஷாலின் அடுத்தடுத்து படங்கள் சொதப்பினாலும் அவரது மார்க் ஆண்டனி படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கல் ரிலீசாக இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மதகஜராஜா படமும் விஷாலுக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

கமர்சியல் மற்றும் காமெடியை மையமாகக் கொண்டு வெளியான மதகஜராஜா படத்தில் விஷால் மற்றும் சந்தானத்தின் காமெடி மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோரின் நடிப்பும் பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது. படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.

vishal vijay ajithkumar

நடிகர் விஷால்: நடிகர் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது மார்க் ஆண்டனி படம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான ரத்னம் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனாலும் தற்போது 12 ஆண்டுகள் கழித்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள மதகஜராஜா படம் விஷாலுக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. படத்தின் வசூல் கடந்த சில தினங்களிலேயே மிகச் சிறப்பாக அமைந்துவரும் சூழலில், தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் சென்று என்ஜாய் செய்து வருகின்றனர்.

அஜித் & ஷோபனாவிற்கு வாழ்த்து: மதகஜராஜா படத்தில் விஷால் மற்றும் சந்தானம் காமெடி மிக சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் நடிகைகளாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலியும் கவனத்தை பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை ஷோபனாவிற்கு அவர் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித்குமார் வெளிநாட்டில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விஷால், அவருக்கும் சோபனாவிற்குமான வாழ்த்து கடிதத்தை அனுப்ப உள்ளதாகவும் அதற்கு கையெழுத்திடுவதற்காகவே தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் என்ற அரசியல்வாதி: இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பல விஷயங்களை பேசியுள்ள விஷால், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியுள்ளார். சக நடிகராக விஜய்யின் ரசிகனாக தான் இந்த விஷயத்தை சிறப்பாக பார்ப்பதாகவும் நடிகர் விஜய் என்ற அரசியல்வாதியை தான் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்யின் தேர்தல் அறிக்கை குறித்து தெரிந்த பின்பே அவரது அரசியல் பயணத்திற்கு தன்னுடைய ஆதரவு இருக்குமா என்பதை கூற முடியும் என்றும் அடுத்த ஆண்டில்தான் தேர்தல் வருகிறது என்று கூறியுள்ள விஷால், நேரம் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மிஷ்கினுக்கு கண்டனம்: இதனிடையே சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அடிப்படை குடிநீர் வசதி கூட இல்லாத பல இடங்கள் உள்ளதாகவும் இந்த அடிப்படை வசதிகளை கவனத்தில் கொண்டு விஜய் செயல்படுவது சிறப்பாக அமையும் என்றும் விஷால் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில் இளையராஜாவை மேடையில் மரியாதை இன்றி பேசிய மிஷ்கினுக்கும் விஷால் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷனின்போது அதிகமான உடல்நிலை பாதிப்பால் தவித்து வந்த நடிகர் விஷால் தற்போது மிகவும் தெளிவான உடல்நிலையுடன் காணப்படுவதை பார்க்க முடிந்தது.

vishal vijay ajithkumar

உடல்நிலை தேறிய விஷால்: முன்னதாக மதகஜராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விஷால், மைக்கை கூட பிடிக்க முடியாத அளவில் கை நடுக்கத்துடனும் உடல் நடுக்கத்துடனும் காணப்பட்டார். இதையடுத்து அவருக்கு மேடையில் அமர்ந்து பேசுவதற்கு சேர் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைகளை அவருக்கு ஏற்படுத்தியது. இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்ததன் மூலம் விஷாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் பேசினர். இந்நிலையில் விஷாலின் உடல்நலம் தேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X