twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆளுநரை சந்தித்து பேசியது என்ன? நடிகர் விஷால் பரபரப்பு விளக்கம்!

    |

    Recommended Video

    Nadigar Sangam: பாண்டவர் அணி பொய் மட்டுமே பேசுகிறது - சுவாமி சங்கரதாஸ் அணி- வீடியோ

    சென்னை: ஆளுநரை சந்தித்து பேசியது என்ன என்பது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

    நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    Actor Vishal has met Governor Banwarilal Purohit

    ஆனால் நடிகர் சங்க தேர்தலில் பாதுகாப்பு உள்ளிட்ட அதிக குளறுபடிகள் உள்ளதாக கூறி தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டது. முன்னதாக நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.

    ஆளுநரை விஷால், நாசர், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் சந்தித்தனர். ஆளுநருக்கும் நடிகர் சங்க தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்நிலையில் ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நடிகர் சங்க தேர்தலை நியாயமான முறையில் போதிய பாதுகாப்புடன் நடத்த கோரிக்கை வைத்தோம்.

    நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம். நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என நம்பிக்கை உள்ளது என்றும் விஷால் கூறினார்.

    English summary
    Actor Vishal has met Governor Banwarilal Purohit. Vishal given interview after meeting with Governor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X