சண்டைக் காட்சியில் மோதல்.. விஷால் முதுகில் பலத்த காயம்.. பதறிய பிரபல இயக்குநர்!

சென்னை: சண்டைக் காட்சியில் நடித்த போது நடிகர் விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதை கேட்டு வருத்தமடைந்ததாக பிரபல இயக்குநர் டிவிட்டியுள்ளார்.

நடிகர் விஷால் நடித்து வரும் 'விஷால் 31' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார்.

இப்படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. டிம்பில் ஹயாத்தி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

கிளைமேக்ஸ் காட்சி

கிளைமேக்ஸ் காட்சி

மேலும் யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

விஷாலுக்கு காயம்

விஷாலுக்கு காயம்

இதில் விஷால் - பாபுராஜ் இருவரும் மோதும்போது, விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக பிசியோதெரபி மருத்துவர் மூலம் படப்பிடிப்பு தளத்திலேயே விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

வருத்தமடைந்தேன்

வருத்தமடைந்தேன்

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த இயக்குநர் சீனு ராமசாமி, அவர் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, அன்பு சகோதரர் நடிகர் விஷால் படப்பிடிப்பில் காயமடைந்த தகவல் அறிந்து வருந்தினேன்.அவர் விரைந்து நலம்பெற்று தன் பணிகளை தொடர்ந்திட அன்பு கலந்த வாழ்த்துகளோடு பிரார்த்திக்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

நாளை மாலை டீசர்

நாளை மாலை டீசர்

இதனிடையே விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டீசர் நாளை மாலை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அவன் இவன் படத்திற்கு பிறகு விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X