இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஷால்…இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி!

சென்னை : நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பல்வேறு முகங்களை கொண்டுள்ள நடிகர் விஷால் அதேசமயம் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகனான விஷால் உதவி இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சக்ரா படத்தை தயாரித்து வரும் இவர் அதே சமயம் துப்பறிவாளன் பாகம் 2-யும் தற்போது தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 29-ஆம் தேதியான இன்று இவர் 43வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல்வேறு திரை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்ற நிலையில் இவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களோடு சேர்த்து பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர்.

உதவி இயக்குனராக

உதவி இயக்குனராக

ஆறடி உயரம் வாட்ட சாட்டமான உடல் அமைப்பு என பார்க்கும் போதே ஆக்சன் ஹீரோ போல தோன்றும் விஷால், பல்வேறு ஆக்சன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆக்சன் கிங் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷால் "செல்லமே" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்று வெற்றிகரமான ஆக்சன் ஹீரோவாக மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தோடு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆக்சன் ஹீரோவாக

ஆக்சன் ஹீரோவாக

இயக்குனர் லிங்குசாமி இயக்கிய "சண்டைக்கோழி" திரைப்படம் இவரை மிகப் பெரிய ஆக்சன் ஹீரோவாக மக்களிடையே பிரபலப்படுத்தியதை தொடர்ந்து திமிரு, மலைக்கோட்டை, தாமிரபரணி, சத்தியம் என தொடர்ந்து பறந்து பறந்து அடிக்கும் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

பாலா இயக்கத்தில்

பாலா இயக்கத்தில்

எதார்த்த இயக்குனர் பாலா இயக்கத்தில் "அவன் இவன்" திரைப்படத்தில் சற்றும் எதிர்பாராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நிலையில் அவன் இவன் திரைப்படத்தில் இவரின் சிறந்த நடிப்பிற்காக பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் இவருக்கு வழங்கப்பட்டது.

தயாரிப்பாளராகவும்

தயாரிப்பாளராகவும்

இவ்வாறு நடிப்பில் பன்முகம் காட்டி வரும் விஷால் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய "பாண்டியநாடு" திரைப்படத்தில் ஒரு சாதுவான நபராக நடித்தது மட்டுமல்லாமல் முதல்முறையாக தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். எதார்த்தமான கதைக்களத்தை கொண்ட பாண்டியநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளிய நிலையில் இத்திரைப்படம் விஷாலின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

வெளியாகாமல் கிடப்பில்

வெளியாகாமல் கிடப்பில்

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் "மத கஜ ராஜா" என்ற திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடி பாடகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து முன்னணி

தொடர்ந்து முன்னணி

இவ்வாறு புதுமையான கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷால் துப்பறிவாளன், இரும்பு திரை, அயோக்யா என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

துப்பறிவாளன் 2

துப்பறிவாளன் 2

இவ்வாறு தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த ஆக்சன் நடிகராகவும் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் இருந்து வரும் விஷால் தற்பொழுது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.

Recommended Video

Mysskin Emotional 'I Miss Vishal' | Thupparivalan 2 • Vishal Mysskin
43வது பிறந்தநாளை

43வது பிறந்தநாளை

இந்நிலையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று விஷால் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவரின் ரசிகர்கள் பலரும் ஏழை மக்களுக்கு பல நலதிட்ட உதவிகளை செய்தவாறு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X