Vishal: மத கஜ ராஜா ப்ரீமியர் ஷோவில் விஷால்.. உடம்பு சரியில்லன்னாலும் ரெஸ்ட் எடுக்க மாட்டேங்குறாரே!
சென்னை: நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் என கலக்கல் கூட்டணியில் சுந்தர் சி இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில் கடந்த 2012ம் ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட மத கஜ ராஜா படம் அடுத்த ஆண்டிலேயே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் தயாரிப்பு தரப்பின் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் படம் தற்போது 12 ஆண்டுகள் கழித்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்தப் படத்தின் என்டர்டெயின்மெண்டிற்கு நாங்கள் கியாரண்டி என்று நெஞ்சை நிமிர்த்தி விஷால், சுந்தர் சி ஆகியோர் இந்தப் படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கூறினார்கள். படம் நாளைய தினம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில், தற்போது சென்னையில் படத்தின் ப்ரீமியர் ஷோ நடத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஷால்: நடிகர் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் சொதப்பலாக அமைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மார்க் ஆண்டனி படம் சிறப்பாக கைக்கொடுத்தது. அதன்பின்பு வெளியான ரத்னம் படம் கூட சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டிலேயே ரிலீசுக்கு தயாரான மத கஜ ராஜா படம் தற்போது 12 ஆண்டுகள் கழித்து ரிலீசாகவுள்ளது. நாளைய தினம் பொங்கல் கொண்டாட்டமாக இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் நடத்தியுள்ளனர். படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வெளியானது.
மத கஜ ராஜா படம்: ஆனாலும் குறைந்த தினங்களிலேயே அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு வந்த விஷால் ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். மைக்கை கூட கையில் பிடிக்க முடியாமல் அவரது உடல் நடுங்கிய நிலையில், அவருக்கு தனியாக சேர் போடப்பட்டு அதில் அவர் அமர வைக்கப்பட்டார். அவருக்கு வைரல் காய்ச்சல் என்று கூறப்பட்டது. அவன் இவன் படத்தில் நடித்ததால்தான் விஷாலுக்கு இந்த நிலை என்று கூறப்பட்டது. காய்ச்சல் என்று மருத்துவரும் சர்ட்டிபிகேட் கொடுத்திருந்தார்.
விஷால் உடல்நலக்குறைவு: செல்லமே படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த விஷால் அடுத்தடுத்து சண்டக்கோழி உள்ளிட்ட படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், கம்பீரமான அவர் மீண்டு மீண்டும் வரவேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்தனர். அவரது நண்பர்களும் சக நடிகர்களுமான ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்களும் விஷால் மீண்டும் சிறப்பாக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆர்யா விஷாலை சிறப்பாக்க கங்கணம் கட்டிக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத கஜ ராஜா படத்தின் ப்ரீமியர் ஷோ இன்றைய தினம் சென்னை சத்யம் திரையரங்கில் நடத்தப்பட்டுள்ளது.
ப்ரீமியர் ஷோவில் விஷால்: ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த ப்ரீமியர் ஷோவில் விஷால் பங்கேற்க மாட்டார் என்றே கருதப்பட்டது. ஆனாலும் நான் அப்படியெல்லாம் முடங்கிவிட மாட்டேன் என்று கூறும்வகையில் நடிகர் விஷால் இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் தற்போது பங்கேற்றுள்ளார். உடல் நலம் தேற வேண்டும என்று ரசிகர்கள் வேண்டிவரும் நிலையில், அவர் தற்போது இந்த ஷோவில் பங்கேற்றுள்ளதால், அவர் உடல்நலன் தேறிவிட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











