நிலநடுக்கத்தைக்கூட மறந்துட்டாங்க.. கை நடுக்கத்தை வேகமா பரப்பிட்டாங்க.. விஷால் நகைச்சுவை பேச்சு!

சென்னை: மதகஜராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படத்தில், விஷால், சந்தானம், வரலட்சுமி,அஞ்சலி, மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஷால் நிலநடுக்கத்தைக்கூட மறந்துட்டாங்க, ஆனால் கை நடுக்க செய்தி உலகம் முழுவதும் டிரெண்டாகி விட்டது என்றார்.

இதையடுத்து நேற்று சென்னையில் நடைபெற்ற மதகஜராஜா படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால், பொதுவாக நிலநடுக்கம் நடந்தால் ஒரு நாளைக்கு ஒரு நியூஸ் போடுவார்கள். பேப்பரில் ஒரு சின்ன துண்டு நியூஸ் போல தான் அந்த செய்தி வரும். அடுத்த நாள் அதை அனைவரும் மறந்து விடுவார்கள். ஆனால், விஷாலின் கை நடுக்கம் செய்தி உலகம் முழுவதும் பிரபலமாகி, விஷாலுக்கு என்ன ஆச்சு? விஷாலுக்கு என்ன பிரச்சனை, விஷாலை இப்படி பார்த்ததே இல்லையே என்று உலகம் முழுவதும் இருக்கும் பலரும் எனக்காக வேண்டினார்கள்.

madha gaja raja vishal speech

விஷாலுக்கு என்ன ஆச்சு: அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கனடாவில் இருந்து சம்பந்தமே இல்லாமல் அமெரிக்காவிலிருந்து, சினிமா பார்க்காத ஒரு கூட்டம் என அனைவருமே விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கண்ணீர் விட்டு இருந்தார்கள். அதுபோன்ற செய்தி பரப்பியவர்களுக்கு நன்றி. இந்த செய்தியால் தான் எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள், இதுவரை என்னை நேசிக்காதவர்களும் என்னை நேசித்தார்கள். எனக்காகவும் என்னுடைய உடல் நலம் குறித்தும் கண்ணீர் சிந்துபவர்கள் யார் யார் என்பதை என்னால் அடையாளம் காண முடிந்தது.

கடுமையான காய்ச்சல்: மதகஜ ராஜா செய்தியாளர் சந்திப்பின்போது எனக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது டாக்டர்கள் அந்த நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என்றார்கள். ஆனால், எனக்கு அந்த நேரத்தில், சுந்தர் சி தான் என் கண்முன் வந்தார். அவர் இந்த படம் வெளியே வர வேண்டும் என்று 12 வருடமாக பட்ட கஷ்டம் தான் என் நினைவிற்கு வந்தது, உடனே நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் முடியாமல் தான் கலந்து கொண்டேன். உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், மனதில் பட்டத்தை எல்லாம் எழுதாதீர்கள், இது போன்ற செய்தி பரவினால், அது குறித்து நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் அழைத்து என்ன என்று விசாரித்த பிறகு செய்திகளை எழுதுங்கள். அதை விட்டுவிட்டு அனைவரும் இயக்குனர் போல மனதில் பட்டதை எல்லாம் எழுதுவது சரியாக இருக்காது.

போதைக்கு அடிமையாகி விட்டேன்: விஷால் போதைக்கு அடிமையாகி விட்டார், அவருக்கு நரம்பு தளர்ச்சி வந்து விட்டது என்று ஒரு மருத்துவர் பேட்டி அளித்து இருக்கிறார். உண்மையிலேயே அவர் மருத்துவரா? இல்லையா? என்று கூட எனக்கு தெரியாது. அனைவருமே ஏதோ ஒரு கற்பனை உலகத்திற்கு சென்று என்னைப் பற்றி பலவிதமான கருத்துக்களை வெளியிட்டார்கள். இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இதன் மூலமாகத்தான் எத்தனை பேர் என் மீது அன்பு வைத்து இருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன் என்று நடிகர் விஷால் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X