Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிவாஜி..எம்.ஜி.ஆர்..ரஜினி..கமல்..வித்தியாசமாக வெளியான லத்தி டீசர் ப்ரோமோ!
சென்னை : நடிகர் விஷாலின் லத்தி திரைப்படத்தின் மிரட்டலான டீசர் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
விஷாலின் முதல் பான் இந்திய திரைப்படமாக லத்தி உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் வினோத் குமார் லத்தி படத்தை இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.''
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் லத்தி படம் வெளியாகவுள்ளது.

லத்தி
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி, வீரமே வாகை சூடவா போன்ற படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் லத்தி. இப்படத்தை ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது நடிகர் விஷால் கையில் காயம் ஏற்பட்டது. இதனால், லத்தி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது. பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பில் காயம்
இதையடுத்து லத்தி படத்தின் சண்டைக் காட்சி சென்னையில் இரவு பகலாக சண்டை காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வந்தார். அப்போது, கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு விஷால் செல்கிறார். அப்போது விஷாலை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை தாக்குகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற இந்த சண்டைகாட்சியின்போது விஷால் காயமடைந்ததை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

டீசர் ப்ரோமோ
இதையடுத்து, லத்தி படக்குழு டீசர் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர்,ரஜினி, கமல்,பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த காட்சி வருகிறது. இறுதியாக கவிழ்ந்து கிடக்கும் போலீஸ் வாகனத்தை லத்தியை வைத்து உடைத்துக்கொண்டு விஷால் வருகிறார். மேலும், அந்த படத்தின் டீஸர் வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்கா பிளான்
ஆக்ஷன், காதல், சுவாரசியக் கதை என அனைத்தும் இருந்தும் எனிமி மற்றும் வீரமே வாகைசூடும் படம் தோல்வியை சந்தித்தால், தோல்விக்கு காரணம் என்ன என்பதை விஷால் ஆராய்த்து வருகிறார். விஷாலின் அடுத்த பிளான் லத்தி மற்றும் துப்பறிவாளன் 2 தான். விட்ட இடத்தை இந்த திரைப்படங்களின் மூலம் மீண்டும் கொண்டுவர பக்காவாக பிளான் போட்டு வருகிறார்.
-
கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய சிம்பு,.. காத்திருந்த இயக்குநர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
-
அயலி வெப்சீரிஸில் இடம்பெற்ற டீட்டெய்லான மாதவிடாய் காட்சிகள்.. இந்த அளவுக்கு வீரியம் அவசியம் தானா?
-
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.. தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி!