விஜய்யின் பெற்றோரை சந்தித்த விஷால்… என்னவா இருக்கும்... இணையத்தில் வைரலாகும் போட்டோ !
சென்னை : நடிகர் விஷால், நடிகர் விஜய் பெற்றோரை சந்தித்து உரையாடியுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் பட்டு வேட்டி சட்டையில் அம்சமாக இருக்கின்றனர்.

எனிமி
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில், ஆர்யா, பிரகாஷ்ராஜ், தம்பிராமைய்யா,மிருணாளினி, கருணாகரன், மம்தா , மோகன்தாஸ் என பலர் நடித்திருந்தனர். அக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருந்தார்.

வீரமே வாகை சூடும்
அடுத்ததாக வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி நடிக்கிறார். வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, ரவீனா, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

வைரலாகும் புகைப்படம்
பெங்களூரில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய்யின் பெற்றோர்களான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சென்று இருந்தனர். இதே விழாவில் கலந்துகொள்ள நடிகர் விஷாலும் சென்றிருந்தார். அப்போது, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபாவை விஷால் சந்தித்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டதாகவும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Recommended Video

சுனைனா ஜோடி
நடிகர் விஷால் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் உருவாகி வரும், விஷால் 32 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அக்ஷன், த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடித்து வருகிறார்அடுத்ததாக, துப்பறிவாளன் 2 படத்தை இயக்குகிறார் விஷால்.


Click it and Unblock the Notifications











