பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் வீட்டுக்குச் சென்ற விஷால்.. வைரலாகும் புகைப்படங்கள்!
பெங்களூரு: கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார் நடிகர் விஷால்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை அறிந்து மனம் வாடிய நடிகர் விஷால் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று புனித் ராஜ்குமாரின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், பெங்களூருவில் வசித்து வரும் நடிகை சரோஜா தேவியையும் விஷால் சந்தித்துள்ளார்.

பெங்களூருவில் விஷால்
தீபாவளியை முன்னிட்டு விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெற்றி பெற்ற கொண்டாட்டத்தை முடித்த நடிகர் விஷால் புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தார். பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

புனித்குமாருக்கு அஞ்சலி
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த விஷாலுக்கு அவரது மரணம் மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு சமீபத்தில் சென்ற நடிகர் விஷால் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி விட்டு புனித் ராஜ்குமாரின் புகைப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

சரோஜா தேவியுடன் சந்திப்பு
கன்னடத்து பைங்கிளி என அன்போடு அழைக்கப்படும் அன்பே வா நடிகை சரோஜா தேவியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகர் விஷால். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஷால் மகிழ்ச்சி
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சரோஜா தேவி. இந்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்ற பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை சந்தித்ததில் தனக்கு பெரும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

கைவசம் 3 படங்கள்
எனிமி படம் வெளியான நிலையில், நடிகர் விஷால் வீரமே வாகை சூடும், லத்தி மற்றும் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இந்த மூன்று படங்களும் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், புனித் ராஜ்குமார் படிக்க வைத்த 1800 குழந்தைகளில் கல்விச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக விஷால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











