twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்

    |

    சென்னை: நடிகர் விஷாலின் கால்ஷீட் தன்னிடம் உள்ளதாக கூறி ரூ.47 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையைச் சேர்ந்த இயக்குநர் வடிவுடையான். இவர், தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவ்சார்பேட்டை, பொட்டு, கன்னியும் காளையும் செம காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் கன்னியும் காளையும் செம காதல் படம் இன்னும் வெளியாகவில்லை.

    Actor Vishal name misused by Director and police complaint registered

    இந்நிலையில், வடிவுடையான் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நரேஷ் கோத்தாரியிடம் தன்னை இயக்குநர் என்று அறிமுகம் செய்துகொண்டதுடன், தன்னிடம் சுமார் ரூ.7 கோடி மதிப்பில் அருமையான கதை ஒன்று உள்ளதாக கூறியுதோடு அதற்காக நடிகர் விஷாலின் கால்ஷீட் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இதை உடனே நம்பிய தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி வடிவுடையானிடம் மூன்று தவணையில் 47 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் வடிவுடையான் சொன்னபடி படமும் எடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நரேஷ் கோத்தாரி, விஷாலை அனுகி அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதற்கு விஷால் தரப்பினர் வடிவுடையானுக்கு கால் சீட் வழங்கவில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து வடிவுடையான் தன்னை மோசடி செய்துவிட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நரேஷ் கோத்தாரி புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Actor Vishal name misused by Director and police complaint registered

    ஆனால் வடிவுடையான் தரப்பில், தனக்கு நரேஷ் கோத்தாரி யார் என்றே தெரியாது என்று சொன்னதோடு, இதுபற்றி விரிவாக விளக்கி கடிதம் எழுதி பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ளார். அந்தக் கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

    இன்று காலை முதல் என்னை பற்றி தவறான செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. நரேஷ் கோத்தாரி என்பவர் நான் அவரிடம் விஷாலை வைத்து படம் இயக்குவதாக கூறி ரூ.47 லட்சம் பணம் கடன் வாங்கிக்கொண்டு திருப்பி தரவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன அது முற்றிலும் தவறானது.

    Actor Vishal name misused by Director and police complaint registered

    நரேஷ் கோத்தாரி யார் என்றே எனக்கு தெரியாது. அவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் கடந்த ஆண்டு அசோக் லோதா என்பவரிடம் ரூபாய் 3 லட்சம் கடனாக பெற்றேன். அதற்காக நிரப்பப்படாத காசோலை மற்றும் என் கையெழுத்திட்ட பத்திரம் போன்றவற்றை கொடுத்து பணம் பெற்றேன்.

    ஆனால் அந்த தொகையை வட்டியும், முதலுமாக அவருக்கு திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் அவர் என் காசோலையையும், பத்திரத்தையும் திருப்பி தர மறுத்ததால், நான் அவர் மீது சென்னை 6ஆவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

    அதனால் கோபமடைந்த அசோக் லோதா எனது நிரப்பப்படாத காசோலையையும், பத்திரத்தையும் சுரேஷ் கோத்தாரியிடம் கொடுத்து அதில் நான் அவரிடம் பணம் பெற்றது போல் நிரப்பி தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று எனக்கு சந்தேகம் உள்ளது.

    எனது நற்பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிப்பதற்காக இது போல் பொய்யான பழியை என்மீது சுமத்தியுள்ள அவர்கள் மீது நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.

    V.C. வடிவுடையான்
    இயக்குனர், தயாரிப்பாளர்

    English summary
    Producer Naresh Kothari has lodged a complaint against VC.Vadivudaiyan at the police station claiming that actor Vishal's call sheet was defrauded of Rs. 47 lakh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X