மேடையில் நடுங்கிய விஷால்.. சேர் போட்டு அமர வைத்த மதகஜராஜா டீம்.. பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் திணறல்!
சென்னை: நடிகர் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மதகஜராஜா படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கல் கொண்டாட்டமாக இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் காமெடி என்டர்டெயின்மென்டாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு நீண்ட காலங்களாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் தற்போது மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இரு தினங்களுக்கு முன்புதான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மிக சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதகஜராஜா படம்: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட மதகஜராஜா படம் 2013லியே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பாளர்களின் நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. அடுத்தடுத்து பல தருணங்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டத்திலும் படம் ரிலீஸ் ஆகாத நிலையே காணப்பட்டது. இந்நிலையில் 12 வருடங்கள் கழித்து இந்த படத்தை படக்குழுவினர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வரும் 12ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி: படத்தின் ரிலீசையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தின் ரிலீஸ் தேதியே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை சென்னையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். இந்த படம் துவங்கப்பட்ட காலகட்டத்தில் படத்தின் ஹீரோ விஷால், காமெடியன் சந்தானம், இயக்குநர் சுந்தர் சி மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி என இருந்த நிலையில் தற்போது இவர்கள் நால்வருமே ஹீரோக்களாக வலம்வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஷால், சுந்தர் சி, விஜய் ஆண்டனி ஆகியோர் மதகஜராஜா பட பிரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
சோர்வாக காணப்பட்ட விஷால்: நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய படத்தின் இயக்குநர் சுந்தர் சி, இந்த படம் இத்தனை ஆண்டு காலம் கழித்து ரிலீசாகவுள்ள நிலையில் சோசியல் மீடியாவில் படத்தை கலாய்ப்பார்கள் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் வெளியிட்டு வருவதாகவும் தன்னுடைய உற்சாகத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் மிகவும் சோர்வாக காணப்பட்டார். பாரம்பரிய உடையில் அவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நிலையில் கண்களில் கண்ணாடி போட்டுக்கொண்டு உற்சாகம் இல்லாமல் காணப்பட்டது அவரது ரசிகர்களை கேள்வி எழுப்ப வைத்தது.
கைநடுங்கிய விஷால்: இந்நிலையில் அவரால் மேடையில் மைக்கை பிடித்து பேசக்கூட முடியாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் அவருக்கு படக்குழுவினர் சேரை போட்டு அமர வைத்தனர். இந்நிலையில் அவருக்கு ஜுரம் இருப்பதாகவும் அதனால்தான் அவரால் பேச முடியவில்லை என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. உதவி இயக்குநராக கோலிவுட்டில் தன்னுடைய கேரியரை துவங்கிய விஷால் தொடர்ந்து செல்லமே படம் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அடுத்தடுத்து சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் அவர் மாஸ்காட்டி உள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி மற்றும் ரத்னம் படங்கள் வெளியான நிலையில் இதில் மார்க் ஆண்டனி படம் சிறப்பாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











