ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்!
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததே பாஜக தோல்விக்கு காரணம் என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகளின்படி பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலேயே காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிவிட்டதால் பாஜக தலைமையில் உள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததே பாஜக தோல்விக்கு காரணம் என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் விஷால் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "மக்களுடைய மனதில் இருந்த முடிவுகள் தான் இப்பொழுது தேர்தலின் முடிவாக வந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தது தான் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம்" என்றார்.


Click it and Unblock the Notifications











