Actor Vishal: இவன்லாம் என்ன டைரக்ஷன் பண்ணி கிழிக்கப்போறான்னு நினைக்கிறாங்க.. விஷால் வருத்தம்!

சென்னை: நடிகர் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான விஷாலின் மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படத்தில் அவருடன் எஸ்ஜே சூர்யா லீட் கேரக்டரில் நடித்திருந்த நிலையில், இந்தக் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. டைம் டிராவலை மையமாக கொண்டு படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.

அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வரும் 26ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்தின் சூட்டிங்கை துவங்கவுள்ளார் விஷால்.

Actor Vishal opens up about his direction of Thupparivaalan 2 movie

நடிகர் விஷால்: நடிகர் விஷால் தயாரிப்பாளர், நடிகர் என்ற பல தளங்களில் பயணம் செய்து வருகிறார். தற்போது இயக்குநராகவும் மாறவுள்ளார். அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்க களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்த நிலையில், படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமானது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் மீண்டும் மிஷ்கினுடன் இணைய விஷால் கமிட்டானார். சூட்டிங்கும் லண்டனில் துவங்கப்பட்ட சூழலில் சில காரணங்களால் விஷால் -மிஷ்கின் இடையில் மனக்கசப்பு ஏற்பட படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

துப்பறிவாளன் 2 படம்: தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கவுள்ளதாக விஷால் அறிவித்திருந்தார். சினிமாவில் இயக்குநராகும் கனவில் உதவி இயக்குநராக களமிறங்கிய விஷாலுக்கு நடிகராகும் வாய்ப்பு கதவைத்தட்ட தன்னுடைய இயக்குநர் கனவை சிறிது காலங்களுக்கு நிறுத்திவிட்டு, நடிகராக நடித்துவருகிறார். இந்நிலையில் மிஷ்கின் துப்பறிவாளன் படத்திலிருந்து விலகிய நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார் விஷால். தொடர்ந்து இடையில் மார்க் ஆண்டனி, ரத்னம் படங்களை முடித்துள்ள விஷால், அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் சூட்டிங்கில் விரைவில் இணையவுள்ளார்.

மே 5ம் தேதி சூட்டிங்: ரத்னம் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தவுடன், துப்பறிவாளன் படத்தின் சூட்டிங்கிற்கான வேலைகளை அவர் துவங்கி விட்டார். இந்தப் படத்திற்கான லொகேஷன்களை பார்ப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் அசர்பைஜான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் சூட்டிங் வரும் மே மாதம் 5ம் தேதி துவங்கவுள்ளதாக விஷால் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ரத்னம் படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களுக்காக பேசிய விஷால் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இவன்லாம் என்ன கிழிக்கப் போறான்?: இவன்லாம் என்ன டைரக்ஷன் பண்ணி கிழிக்கப் போறான் என்று பலரும் நினைப்பதாக விஷால் கூறியுள்ளார். ஆனால் தன்னை நிரூபிக்க இது சரியான நேரம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனால் துப்பறிவாளன் 2 படத்தை தனக்கான சேலஞ்சாக எடுத்துக் கொண்டு, நல்லப்படத்தை கொடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் இயக்குநர் மிஷ்கினுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாகவும் அவரால்தான் தற்போது இயக்குநராகியுள்ளதாகவும் விஷால் மேலும் கூறியுள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X