Vishal: லட்சுமி மேனனோட எனக்கு கல்யாணமா.. முதல்முறையாக மௌனம் கலைத்த விஷால்

சென்னை: நடிகர் விஷால் அடுத்தடுத்த தேர்ந்தெடுத்தப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி படம் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் விஷாலுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

Actor Vishal opens up about the Marriage rumours with Laxmi menon

இதனிடையே தன்னுடைய கல்யாண வதந்திகள் குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் விஷால்.

லட்சுமி மேனனுடன் திருமணம் என பரவிய தகவலுக்கு விஷால் விளக்கம்: நடிகர் விஷால் தொடர்ந்து தேர்ந்தெடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்திய படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், நடிகர் சங்கம் மற்றும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். அடுத்ததாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி படம் ரிலிசாகவுள்ளது. இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விஷால் காணப்படுகிறார். டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

Actor Vishal opens up about the Marriage rumours with Laxmi menon

45 வயதை கடந்த நிலையில் விஷால் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார். இவரது திருமணம் குறித்து தொடர்ந்து கேட்டுவந்த ரசிகர்களுக்கு இவரது பதில் மௌனமாகவே இருந்தது. முன்னதாக வரலட்சமி சரத்குமாருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார் விஷால். ஆனால் இவர்களுக்கிடையில் வெறும் நட்பு மட்டுமே என்று கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக லட்சுமி மேனனுடன் விஷாலுக்கு திருமணம் என்று கூறப்பட்டது.

அதுவும் பொய் என்று கூறப்பட்ட நிலையில், அடுத்ததாக ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவருடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. ஆனால் அந்த திருமணமும் நின்றுப்போன நிலையில், தற்போது மீண்டும் லட்சுமி மேனனுடன் விஷாலுக்கு திருமணம் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தன்னுடைய திருமணம் மற்றும் காதல் குறித்து எப்போதும் பேசாத விஷால், தற்போது முதல்முறையாக தன்னுடைய மௌனம் கலைத்துள்ளார்.

Actor Vishal opens up about the Marriage rumours with Laxmi menon

தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு பொதுவாக தான் எந்த ரியாக்ஷனும் செய்வதில்லை என்றும் ஆனால் கடந்த சில தினங்களாக லட்சுமி மேனனுடன் தனக்கு திருமணம் என்று பரவிவரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் கூறியுள்ளார். லட்சுமி மேனன், ஒரு நடிகை என்பதைவிட, அவர் ஒரு பெண் என்பதால் அவரது இமேஜ் கெட தான் காரணமாக இருக்க விரும்பவில்லை என்பதால் இந்த பதிவு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆண்டு, தேதி உள்ளிட்டவற்றை குறித்து திருமணத்தை அறிவிப்பதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல என்று கூறியுள்ள விஷால், நேரம் வரும்போது தன்னுடைய திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகைகளுடன் கிசுகிசுக்கள் வருவது இயல்புதான் என்ற போதிலும், லட்சுமி மேனனுக்காக விஷால் தற்போது வாய்ஸ் கொடுத்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X