நடிகர் புனித் ராஜ்குமார் பெயரில் மரக்கன்று நட்டு மரியாதை செலுத்திய பிரபல நடிகர்... வைரலாகும் போட்டோ!

சென்னை: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பெயரில் மரக்கன்று நட்டு பிரபல நடிகர் மரியாதை செலுத்தியுள்ளார்.

கன்னட சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக் கிழமை திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு அரசு மரியாதையுடன் கண்டீரவா ஸ்டுடியோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கல்வி செலவை ஏற்ற விஷால்

கல்வி செலவை ஏற்ற விஷால்

46 வயதே ஆன நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால், புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவ மாணவிகளின் கல்வி செலவை இனி தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

புனித் ராஜ்குமார் பெயரில் மரக்கன்று

புனித் ராஜ்குமார் பெயரில் மரக்கன்று

அதனை தொடர்ந்து தற்போது ஹைத்ராபாத்தில் புனித் ராஜ்குமாரில் மரக்கன்று ஒன்றை நட்டு மரியாதை செலுத்தியுள்ளார் நடிகர் விஷால். இந்த க்ரீன் இந்தியா சேலஞ் நிகழ்வில் நடிகர் விஷாலுடன், எனிமி படத்தில் நடித்துள்ள நடிகர் ஆர்யாவும் பங்கேற்றார்.

எனிமி நாளை ரிலீஸ்

எனிமி நாளை ரிலீஸ்

எனிமி படத்தின் புரமோஷனாக க்ரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்றனர் விஷாலும் ஆர்யாவும். எனிமி படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆகிறது.

நான்கு பேருக்கு பார்வை

நான்கு பேருக்கு பார்வை

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உயிருடன் இருக்கும் போது பல ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். பல மாணவர்கள் கல்வி பெறவும் உதவி வந்தார். அவரால் 1800 மாணவர்கள் கல்வி பெற உதவி வந்தார். இறந்த பிறகும் தனது இரண்டு கண்களையும் தானம் செய்தார். அதன் மூலம் நான்கு பேர் பார்வை பெற்றனர்.

சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி

சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி

நேற்று முன்தினம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், அவரது நினைவிடத்தில் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது மனைவி அஷ்வினியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X