Vishal Praised S.J.Suryah - அப்போ சொன்னாரு இப்போவரைக்கும் செய்றாரு.. எஸ்.ஜே.சூர்யாவை புகழ்ந்த விஷால்
சென்னை: Vishal (விஷால்) எஸ்.ஜே.சூர்யா பல வருடங்களுக்கு முன்னர் தன்னிடம் சொன்னதை இன்றுவரை செய்துகொண்டிருக்கிறார் என விஷால் புகழ்ந்திருக்கிறார்.
வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கிவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் இயக்கிய அத்தனை படங்களிலும் வித்தியாசமான கதையோ அல்லது வித்தியாசமான மேக்கிங்கோ இருக்கும். இதன் காரணமாக அவரது இயக்கத்துக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதேசமயம் அவரது படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருக்கும் என்ற விமர்சனமும் எழுந்தது. அதனை எஸ்.ஜே.சூர்யாவும் சமீபத்தில் ஒத்துக்கொண்டார்.

நடிகராக சூர்யா: எஸ்.ஜே. சூர்யா புகழ் பெற்ற இயக்குநராக இருந்தாலும் அவர் சினிமாவுக்கு வந்தது நடிகனாக வேண்டும் என்ற ஆசையில்தான். முதல் இரண்டு படங்களை இயக்கி வெற்றி கண்ட பிறகு தனது மூன்றாவது படமான நியூவில் தானே ஹீரோவாகிவிட்டார். பிறகு சில படங்களில் நடித்த அவர் இறைவி படத்தின் மூலம் தான் சிறந்த நடிகர் என்பதை உணர்த்தினார்.
பிஸியான நடிகர்: அந்தப் படத்துக்கு பிறகு நடித்த படங்களில் மாநாடு படம் பெரிய திருப்புமுனையை அவருக்கு ஏற்படுத்தியது. மாநாடுக்கு பிறகு வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவருகின்றன. அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக பொம்மை படம் வெளியானது. மேலும் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா அண்ணன்: எஸ்.ஜே.சூர்யா நல்ல நண்பர் என்பதைவிட நல்ல அண்ணன் எனக்கு. நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் பகிர்ந்துகொள்வதற்கு ஒருவர் கிடைத்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் சன் டிவில நான் ஒரு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் படிப்பதற்கு ஆசை இருக்கிறது. ஆனால் பணம் இல்லை என்றார்கள். அதனையடுத்து அதுகுறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசினேன்.
இன்னமும் செய்கிறார்: அதனையடுத்து அவர் 50,000 ரூபாய் கொடுத்தார். தற்போது மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் அந்த நிகழ்ச்சி குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அந்தக் குடும்பத்துக்கு 50,000 ரூபாயை இன்னமும் கொடுத்துட்டுதான் இருக்கிறேன் என சொன்னார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று சொன்னதை இன்றுவரை செய்துகொண்டிருக்கிறார்.
அதுதான் அவருடைய நல்ல குணம். 25 வருடங்களாக சூர்யா ஒரு வெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறார். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன" என்றார். விஷால் நடித்த படங்களில் கடைசியாக துப்பறிவாளன் படம் மட்டுமே ஹிட்டடித்தது. அதற்கு பிறகு அவர் நடித்த ஆக்ஷன், லத்தி போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. எனவே மார்க் ஆண்டனி படமாவது ஹிட்டாக வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கிறார் விஷால். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











