Vishal: ஸ்ரீ ரெட்டி யாருன்னே எனக்குத் தெரியாது.. ஆனா அவங்க செய்த சேட்டைகள் தெரியும் - விஷால் நக்கல்!

சென்னை: தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான். முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக மாறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன் லால் அவராகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால், மோகன் லால் தனது பதவியை ராஜினாமா செய்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன் லால் ராஜினாமா செய்ததால், மோகன் லாலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எனவும், அதனால்தான் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.

vishal sri reddy hema committee

இதுமட்டும் இல்லாமல், ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கைக்குப் பின்னர், இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், பல நடிகர்கள் மீது பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் அளித்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகமே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளது. இதுமட்டும் இல்லாமல், கேரளாவில் இருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் பலமொழி திரைப்படங்களில் நடித்த நடிகைகளும் உள்ளனர்.

vishal sri reddy hema committee

ஹேமா கமிட்டி: இந்த நடிகைகள் ஹேமா கமிட்டியிடம் மற்ற மொழி நடிகர்கள், இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம் என பலரும் நடுங்கிக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷால் இன்று அதாவது, ஆகஸ்ட் 29ஆம் தேதி தனது 47வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். தனது பிறந்த நாளில் கோவிலுக்குச் சென்றுவிட்டு, சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவளித்து அவர்களிடமும் ஆசி பெற்றார்.

vishal sri reddy hema committee

விஷால்: இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசினார். அப்போது, மலையாள சினிமா உலகில் நடைபெற்ற பாலியல் தொல்லைகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் அளித்த அறிக்கை குறித்தும் செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விஷால், " தமிழ் சினிமாவிலும் இது போன்ற கமிட்டி விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் யாராவது நடிகைகளிடம் அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசினால், செருப்பைக் கழட்டி அடிங்க எனக் கூறினார். அதேபோல் செய்தியாளர் தரப்பில் இருந்து நடிகை ஸ்ரீ ரெட்டி உங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது.

vishal sri reddy hema committee

ஸ்ரீ ரெட்டி விவகாரம்: செய்தியாளரளின் இந்தக் கேள்விக்கு, எனக்கு ஸ்ரீ ரெட்டி யாரென்று தெரியாது. ஆனால் அவர் செய்த சேட்டைகள் எனக்கு நன்றாகத் தெரியும். உண்மை எதுவென்று தெரியாமல், ஒருவர் மீது குற்றம் சாட்டுவது தவறான செயல் என பதில் அளித்துள்ளார். இது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே, நடிகர் விஷால் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி, தன்னை பாலியல் இச்சைக்கு உடந்தை ஆக்கினார் என பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். மேலும் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X