twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலாவுக்காக மீண்டும் வாய்ஸ் கொடுக்கும் விஷால்... தடையை விலக்க கர்நாடகாவுக்கு கோரிக்கை

    காலா பிரச்சினை தொடர்பாக நடிகர் விஷால் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    |

    Recommended Video

    கர்நாடகத்தில் காலாவுக்கும்; தூத்துக்குடியில் ரஜினிக்கும் ஆதரவாக பேசிய விஷால் - வீடியோ

    சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நீக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

    காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்தக் கருத்துக்களுக்கு கர்நாடக அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், அப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடைவிதித்துள்ளது.

    இந்நிலையில், படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளில் காலா படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதற்கு ஆதரவாக நடிகர் விஷால் ஆடியோ பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.
    அதில் அவர் கூறியிருப்பதாவது,

    காலாவிற்கு தடையா?

    காலாவிற்கு தடையா?

    ரஜினி சார் நடித்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். சினிமா வேறு அரசியல் வேறு. காலா படம் ஒரு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டு அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார். இது திரைபடம். அவர் அரசியலுக்கு வருவது வேறு. நாளை காலை பிலிம் சேம்பர் என்ன முடிவு எடுப்பார்கள் என தெரியவில்லை.

    காவிரி பிரச்சினை:

    காவிரி பிரச்சினை:

    இது கண்டிப்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இது தொடர்பாக சந்திப்போம். காலா படம் எல்லா இடங்களிலும் நல்லபடியா வெளியாக வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் பேசியுள்ளோம் அது தனிப்பட்ட கருத்து. அது ஒரு படத்தை பாதிக்க கூடாது. சினிமாவையும்,அரசியலையும் ஒன்று சேர்க்க கூடாது என்பதே எங்கள் நோக்கம்.

    அரசியல் பிரவேசம்:

    அரசியல் பிரவேசம்:

    ஒவ்வொரு மனிதருக்கும் தனி தனி கருத்து இருக்கும்.என்னை பார்த்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால் நான் ஒரு பதில் சொல்வேன் மற்ற நடிகர்கள் ஒரு பதில் சொல்வார்கள். ஐ.பி.எல் விளையாட்டின் போது ஏற்பட்ட பிரச்சனை பற்றி நீங்கள் பாரதிராஜா சார் கிட்டதான் கேட்கவேண்டும்.ரஜினி சார் அரசியல் வருவது தவறு கிடையாது புது முகங்கள் அரசியலுக்கு வர வேண்டும் தான் அந்த அடிப்படையில் ரஜினி சார் வருகிறார். படம் வெளிவரும் போது அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு.

    வரலாற்றில் இடம் பெற வேண்டும்:

    வரலாற்றில் இடம் பெற வேண்டும்:

    நாம் அனைவரும் இந்தியர்களே. மாநிலங்கள் ஒரு எல்லை கோடு அவ்வளவுதான். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தது அதில் பதிமூன்று பேர் இறந்துள்ளார்கள் கணக்கில் வராதவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என எனக்கும் தெரியும் நானும் ஓட்டு போட்டவன் தான். யார் சுட சொன்னது என்று கேட்டதற்கு டெப்டி தாசில்தார் என்று சொல்கிறார்கள். எஸ்.பி, கலெக்டரையும் இடமாற்றம் செய்துவிட்டார்கள். இதில் முக்கியமான விஷியம் என்னவென்றால் கணக்கில் வந்த பதிமூன்று பேர் இறந்ததற்கு அந்த ஆலை மூடப்பட்டுவிட்டது. இறந்தவர்கள் பெயர் வரலாற்றில் எழுத வேண்டும். 144 தடை போட்டால் முட்டிக்கு கீழே தான் சுட வேண்டும் அது எல்லாருக்குமே தெரிந்தது.

    முட்டாள்தனம்:

    முட்டாள்தனம்:

    மக்களுக்கு தேவையான சில விஷயம் ஜல்லிகட்டு பிரச்சனையா இருக்கட்டும் நெடுவாசல், ஸ்டெர்லைட் பிரச்சனையா இருக்கட்டும் அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதே உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கும். இரவில் நாலு பேர் கூடினாலே போலீஸ் வந்து கேட்பார்கள்.இது லட்ச கணக்கான பேர் கூடியும் தெரியவில்லை என்று கூறுவது முட்டாள்தனம்.

    பிரமருக்கு கோரிக்கை:

    பிரமருக்கு கோரிக்கை:

    பிரதமர் வெளிநாடு போகாமல் உள்நாட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தாலே சந்தோஷம் தான். தமிழ் சினிமாவுக்காகவும் நாங்களும் போராடிட்டு தான் இருக்கிறோம். பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன் உள்நாட்டு பிரச்சனைகளை கவனியுங்கள். நல்லது செய்தால் நான் அவருக்கு தானே ஓட்டு போடுவேன், நல்லது செய்யாமல் எப்படி ஓட்டு போட முடியும்.

    போராளிகள்:

    போராளிகள்:

    பதிமூன்று பேர் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு தொகையை நாங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். பதிமூன்று போராளிகளின் குடும்பத்திற்கும் பெரிய இழப்பு தான் அவர்களை மறக்க கூடாது. பாரத பிரதமரை வாக்களித்தவனாக வேண்டி கேட்டுகொள்கிறேன். நம் நாட்டு பிரச்சனையை கவனியுங்கள்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The tamil film producers council president actor Vishal has requested the Karnataka film chamber for commerce to lift the ban on Rajinikanth's Kaala movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X