Vishal: விஜய்யை டைரக்ட் செய்யணும்.. இதுதான் என்னோட நீண்ட நாள் கனவு.. விஷால் பளீச்!

சென்னை: நடிகர் விஷால் பல ஆண்டுகளாக தமிழின் முன்னணி நடிகராக இந்து வருகிறார். அவரது மார்க் ஆண்டனி படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி இவரது பிறந்தநாளையொட்டி படத்தின் அம்மா எனும் மந்திரமே பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷாலை வித்தியாசமான கெட்டப்புகளில் பார்க்க முடிகிறது.

Actor Vishal revealed his wish to direct Thalapathy Vijay

விஜய்யை இயக்குவதுதான் தனது நீண்டநாள் கனவு என விஷால் பேட்டி: நடிகர் விஷால் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நீண்ட காலங்களாக ரசிகர்களை கவர்ந்து வருபவர். தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களில் இவர் நடித்து வருகிறார். இவரது திமிரு, சண்டக்கோழி, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு மாஸாக அமைந்தன. ஆக்ஷன் காட்சிகளில் இவரது சிறப்பான மூவ்மெண்ட்ஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. அடுத்ததாக இவரது நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வரும் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளன.

முன்னதாக நடிகர் அர்ஜூனின் வேதம் படத்தில் உதவி இயக்குநராகத்தான் இவர் சினிமாவில் களமிறங்கினார். ஆனால் செல்லமே படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் த்ரில்லர் கதையம்சத்துடன் வெளியான நிலையில், முதல் படமே விஷாலுக்கு சிறப்பாக அமைந்தது. இவரது உயரம் உள்ளிட்ட அம்சங்கள் இவருக்கு நல்ல லுக்கையும், ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளன.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்கான பிரமோஷன்களில் தற்போது ஈடுபட்டுள்ளார் விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் டைம் டிராவலை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அதில் விஷால், எஸ்ஜே சூர்யாவின் இருவேறு கெட்டப்புகள் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்று தன்னை அடையாளப்படுத்திவரும் விஷால் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய்யிடம் போட்டுக்காட்டி ஆசி பெற்றார். இதனிடையே தற்போது விஷால் கொடுத்துள்ள பேட்டியொன்றில் தான் லியோ படத்தில் அர்ஜூன் கேரக்டரில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டதாக தெரிவித்துள்ளார். விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்துள்ளது. அவர் மிகவும் லக்கி என்று கூறியுள்ள, விஷால், விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குவதே தன்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் கூறியுள்ளார்.

கடந்த 29ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் விஷால். இதையொட்டி மார்க் ஆண்டனி படத்தின் அம்மா எனும் மந்திரமே பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். முன்னதாக படத்தின் அதிருதா, ஐ லவ் யூ டி பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அம்மா எனும் மந்திரமே பாடலும் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்தப் பாடலை அனைத்து தாய்மார்களுக்கும் அர்ப்பணிப்பதாகவும் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X