Vishal: விஜய்யும் அர்ஜூனும் அண்ணன் -தம்பிகளா.. என்ன விஷால் இப்படி சொல்லியிருக்காரு!
சென்னை: நடிகர் விஷால் -இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் பிரமோஷன்களில் நடிகர் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் லியோ படம் குறித்து நடிகர் விஷால் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். லோகேஷிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

லியோ படத்தில் அர்ஜூன் கேரக்டர் குறித்து வெளிப்படுத்திய விஷால்: நடிகர் விஷால் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவரது ஆக்ஷன் படங்கள் தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருகிறார் விஷால். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மார்க் ஆண்டனி படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போது முடுக்கி விட்டுள்ளனர். முன்னதாக படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிக்ர்களை அசத்திய நிலையில், நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக முன்னதாக விஷால் அறிவித்துள்ளார். டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் போஸ்டர்களில் இருவேறு கெட்டப்புகளில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யாவை பார்க்க முடிகிறது. இந்த போஸ்டர்கள் மட்டுமில்லாமல் டீசரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளைய தினம் வெளியாகும் ட்ரெயிலரும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வரும் விஷால் தற்போது விஜய், லோகேஷ் மற்றும் லியோ படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக லியோ படத்தில் விஜய்யின் இளைய சகோதரராக நடிக்க லோகேஷ் தன்னை அணுகியதாகவும், ஆனால் ஒரே நேரத்தில் அதிகமான படங்களில் நடித்தால் தான் ஸ்பிலிட் பர்சனாலிட்டியாக மாறிவிடுவேன் என்பதால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்றும் விஷால் தெரிவித்துள்ளார். லியோ படத்திற்காக 4 மாதங்கள் தன்னுடைய ஒத்துழைப்பை லோகேஷ் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் அந்தப் படத்தின் வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து படத்தில் நடிக்க முடியாதது குறித்து தான் லோகேஷிடம் சாரி சொன்னதாகவும் லோகேஷும் தன்னுடைய பிரச்சினையை புரிந்துக் கொண்டதாகவும் விஷால் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து லோகேஷ் மிகவும் லக்கி என்று தான் கூறியதாகவும் விஷால் தனது பேட்டியில் கூறியுள்ளார். விஜய்யை இயக்கும் தனது விருப்பத்தை கூறியுள்ள விஷால், விரைவில் தனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
லியோ படத்தில் விஜய்யின் இளைய சகோதரனாக நடிக்கும் வாய்ப்பை தனக்கு லோகேஷ் கொடுத்ததாகவும் தன்னால் நடிக்க முடியாத நிலையில், தற்போது அந்த கேரக்டரில் அர்ஜூன் நடித்து வருவதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். ஆனால் அர்ஜூனுக்காக தற்போது அந்த கேரக்டரை லோகேஷ் மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார் விஷால். படத்தில் தற்போது விஜய்யின் அண்ணனாக அர்ஜூன் நடித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஹெரால்ட் தாஸ் என்ற கேரக்டரில்தான் தற்போது அர்ஜூன் நடித்து வருகிறார்.
அர்ஜூன் பிறந்தநாளையொட்டி மிகவும் மிரட்டலான அவரது ஹெரால்ட் தாஸ் கேரக்டரின் க்ளிம்ப்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. விஷாலின் தற்போதைய அப்டேட்டை அடுத்து, விஜய்க்கு அர்ஜூன் சகோதரராக நடித்து வருவது தெரியவருகிறது. முன்னதாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் இருவரும் படத்தில் சகோதரர்களாக நடித்துவருவதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜய்க்கு சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் சகோதரர்களாக நடித்துள்ளது தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











