காலத்தால் அழியாத படைப்புகள் அவர் புகழ் பரப்பும்... முக்தா சீனிவாசன் மறைவுக்கு விஷால் இரங்கல்!

தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

முக்தா சீனிவாசன் இறுதி சடங்கில் சிவகுமார்- வீடியோ

சென்னை: பழம்பெரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசனின் மறைவுக்கு தயாரிப்பாள்ர சங்கத் தலைவர் நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த, பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.

actor vishals condolence for Muktha Srinivasan

65 படங்களை இயக்கிய இவர், தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றவர். முக்தா சீனிவாசனின் உடலுக்கு திரை உலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முக்தா சீனிவாசனின் மறைவிற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா.வி.சீனிவாசன் ஐயா காலமானார் என்பதை கேட்டு துயரம் அடைந்தேன். கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று சகல துறைகளிலும் எங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்' முதல் முறையாக உருவாக்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் நலனுக்காகவும் தமிழ் திரைப்படத்துறை வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்ட முக்தா சீனிவாசன் ஐயா அவர்கள் மறைவுக்கு என் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காலத்தால் அழிக்க முடியாத அவரது படைப்புகள் என்றென்றும் அவர் புகழ் பரப்பும்" என விஷால் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X