தலைக்கு மேல் கடன்... தப்பிக்க விஷால் எடுத்த அதிரடி முடிவு!
Recommended Video

'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற பேனரில் சொந்தமாக என்றைக்குப் படம் எடுக்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து விஷாலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்! ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்பது இவர் விசயத்தில் காலம் கற்றுக் கொடுத்தது அதிகம்.
இரும்புத்திரை படம் ரெடியாகி ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அதனையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டைக்கோழி 2' ஆரம்பித்தார். சென்னை பின்னி மில்லில் பலகோடி செலவு செய்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு இரண்டாவது ஷெட்யூல் கிளம்பிப் போனார்கள். போன இடத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடி! மொத்த யூனிட்டும் சென்னைக்கு வந்துவிட்டது.

அதன்பிறகு தொடர்பு எல்லைக்கு வெளியில் போய்விட்டார். உடல் நிலை சரியில்லை என்பது தொடங்கி...ஏகப்பட்ட வதந்திகள் றெக்கை கட்ட, அதை மறுத்து அறிக்கை விட்டார் விஷால்.
தொடர்பு எல்லைக்கு வெளியே நடந்தது இதுதான். வழக்கமாக விஷால் படங்களுக்கு மதுரை அன்புதான் ஃபைனான்ஸ் கொடுப்பார். நடுவில் நடந்த பஞ்சாயத்துகளால் மதுரை அன்பு விஷாலுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவே இந்த இடைவெளி.
இரும்புத்திரை படத்தை 'லைக்கா' நிறுவனம் மொத்தமாக விலைபேசி வாங்கிக்கொண்டது. தவிர, தெலுங்கில் ஹிட்டடித்த ஒரு படத்தின் கதையை வாங்கி ரீ மேக் பண்ணவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் விஷால். இந்தப் படத்தையும் 'லைக்கா' நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.
ஒருவழியாக கடன் பிரச்சினையிலிருந்து மீண்டார் விஷால். அப்புறமென்ன அடிச்சு ஆடவேண்டியதுதானே!


Click it and Unblock the Notifications











