»   »  அனிதா போன்ற தம்பி தங்கைகளே...! - நடிகர் விஷாலின் உருக்கமான வேண்டுகோள்

அனிதா போன்ற தம்பி தங்கைகளே...! - நடிகர் விஷாலின் உருக்கமான வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு கொடுமையை வெல்ல முடியாமல் தற்கொலை மூலம் மரணத்தைத் தழுவிய மாணவி அனிதாவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள விஷால், ஒரு வேண்டுகோளை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முன்வைத்துள்ளார்.

தங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்தேன். மிகுந்த மன வேதனை அடைந்தேன். அனிதா தான் பாதிக்கப்பட்டது போல பிற மாணவ மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நீதிமன்ற படிகளில் ஏறி போராடியவர். நேற்று ஒரு வார இதழில் அனிதா பற்றி எழுதியிருந்ததை படித்து மிகுந்த பெருமைப்பட்டவனை இன்று வேதனைக்குள்ளாக்கி விட்டாள் அனிதா.

Actor Vishal's sensational appeal to students

196.5 கட் ஆஃப் மார்க் பெற்றும் கூட அனிதா மருத்துவ படிப்புக்கு தகுதியடையவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மக்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவார்கள் என்ற அல ட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். இனி தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் பாதிக்காத வகையில் எங்களுக்காக ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும்.

இப்படி நீட் தேர்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட, அனிதாவைப் போன்ற தம்பி தங்கைகளுக்கு ஒரு கோரிக்கை. தயவுசெய்து இதுபோன்ற தவறான முடிவு எடுக்காமல் என்னை போன்றவர்களை ஒரு சகோதரனாக நினைத்து அணுகினால் படிப்புக்குண்டான உதவிகளை செய்துதர தயாராக இருக்கிறோம்.

- இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

English summary
Vishal, President of Producers Council and Secretary of Nadigar Sangam has made an appeal to students community not to come wrong decision like Anitha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil