விஷாலின் "வீரமே வாகை சூடும்" இத்தனை கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளதா!
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழில் நடிக்கும் திரைப்படங்களில் சொந்த தயாரிப்பில் தயாரித்து வருகிறார் நடிகர் விஷால்
அந்த வகையில் இப்பொழுது குறும்பட இயக்குனர் து. பா.சரவணன் இயக்கத்தில் விஷால் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார்
முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இப்படம் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனிமி படத்தில் எதிரிகளாக
வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறி கொடுத்து வரும் விஷால் தயாரிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த விஷால் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த எனிமி பெரும் வரவேற்ப்பை பெற்றது. நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் ஆர்யா மற்றும் விஷால் எனிமி படத்தில் எதிரிகளாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார்கள். முழுக்க முழுக்க ஆக்ஷனில் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டிருந்தது . இந்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது

வீரமே வாகை சூடும்
இந்த நிலையில் விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. பொதுவாக விஷால் நடிக்கும் திரைப்படங்களை அவரே தயாரித்து வருகிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் உள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தற்போது வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. குறும்பட இயக்குனர் து.பா சரவணன் இப்படத்தை இயக்கி வர டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடித்து வருகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார்கள்.தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஜனவரி 26
விஷாலின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அதில் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது இந்த வகையில் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமை
இந்த நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை சுப்பையா சண்முகம் வாங்கியுள்ளார். இப்படம் 10.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வலிமை, ராதே ஷ்யாம், ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்திற்கு திரையரங்குகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











