நானே விஜய் ரசிகன் தான்.. விஷால் பளிச் பேட்டி.. அப்போ தளபதி 67க்கு வருவது கன்ஃபார்ம் தான் போல!
சென்னை: நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் ரசிகர் மன்ற பிரச்சனை குறித்து எழுப்பிய கேள்விக்கு நானே விஜய் ரசிகன் தான் என பளிச்சென கூறியுள்ளது விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தளபதி என விஜய் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நிலையில், புரட்சி தளபதியாக விஷால் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.
சமீபத்தில், தளபதி 67 படத்தில் விஷால் இணையப் போவதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில் விஷால் இப்படி பேசியிருப்பது ரசிகர்களுக்கு அந்த அப்டேட்டை கன்ஃபார்ம் செய்தது போலவே உள்ளது.

குழந்தையுடன் விஜய்
நடிகர் அஜித் குமாரின் விமான நிலைய போட்டோக்கள் ஒருபக்கம் டிரெண்டாகி வரும் நிலையில், நடிகர் விஜய் குழந்தை ஒன்றை தூக்கி கொஞ்சும் புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது. அந்த குழந்தையையே கூட்டிக் கொண்டு பேட்டி எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என சமூக வலைதளங்களில் மீம்களும் டிரெண்டாகி வருகின்றன. ஏஜ் இன் ரிவர்ஸ் கியர் என்றென்றும் விஜய் ரசிகர்கள் அந்த போட்டோவை ரசித்து வரும் நிலையில், விஷாலின் பேட்டி மேலும் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது.

நானே விஜய் ரசிகன் தான்
சினிமா துறையில் நடிகர் விஜய்க்கு ஏகப்பட்ட முன்னணி நடிகர்களே ரசிகர்களாக உள்ள நிலையில், ரசிக மன்ற பிரச்சனை தொடர்பாக பத்திரிகையாளர்கள் சிலர் விஷாலிடம் நேரடியாகவே அந்த கேள்வியை எழுப்ப, நானே விஜய் ரசிகர் தான். நானும் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறேன் என பதிலளித்துள்ளது விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

லோகேஷ் உடன் சந்திப்பு
சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஷால் சந்தித்துக் கொண்டதாக புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் கசிந்தன. விஜய்க்கு வில்லனாக தளபதி 67 படத்தில் விஷால் தான் நடிக்கப் போகிறார் என்றும் LCUவில் அடுத்து இணையும் முன்னணி நடிகர் விஷால் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.

விஜய்சேதுபதிக்கு பதிலாக விஷால்
மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய்சேதுபதி நடித்து வந்த நிலையில், அவருக்கு ரெஸ்ட் கொடுத்து விட்டு விஷாலை விஜய்க்கு வில்லனாக்க முடிவு செய்து விட்டாரா லோகேஷ் கனகராஜ் என்றும் விஜய் தான் படத்தில் வில்லனே, விஷால் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்றும் கதைகள் சோஷியல் மீடியாவில் உலா வருகின்றன. விஜய் மற்றும் விஷால் திரையில் மோதினாலும் சண்டைக் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











