தீபாவளிக்கு பட்டாசு வாங்காதீங்க.. ஜப்பான் படம் பார்த்தா போதும்.. விஷால் பேச்சு!

சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வாங்க தேவையில்லை ஜப்பான் படம் பார்த்தா போதும் என்று இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேசி உள்ளார்.

Actor Vishal Speech at Japan movie audio and Trailer Launch

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல், சுனில், கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

கார்த்தியின் ஜப்பான்: குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ஜப்பான். சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக மாறும் நடிகர் கார்த்தி, அரசியல்வாதியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளைத் திருடுகிறார். அவரை ஒட்டுமொத்த காவல்துறையும் தேடுகிறது. இறுதியில் ஜப்பான் காவல்துறையிடம் பிடிபட்டாரா இல்லையா என்பதுதான் ஜப்பான் திரைப்படத்தின் கதை.

இசைவெளியீட்டு விழா: இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், கார்த்தி, அனு இமானு வேல், தமன்னா, ராஜுமுருகன், தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு, சூர்யா, ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, லோகேஷ் கனகராஜ் என பலர் கலந்து கொண்டனர்.

விஷால் பேச்சு: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஷால் தனது நண்பர் ஆரியாவுடன் கை கோர்த்தபடி வந்திருந்தார். இதையடுத்து, மேடையில் பேசிய விஷால், ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் 25வது திரைப்படமாகும். இப்படம் வெற்றி அடைய நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மற்றொரு நண்பர் எஸ். ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது என்றார். மேலும், இந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்காதீங்க தேவையில்லை ஜப்பான் படம் தியேட்டரில் பார்த்தா போதும் என்று விஷால் பேசினார்.

Actor Vishal Speech at Japan movie audio and Trailer Launch

ஜப்பான் டிரைலர்: இதையடுத்து, ஜப்பான் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. 2.19 நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலரில் கார்த்தி முழு வசனத்தையும் பேசுகிறார். இணையத்தில் வைரலாகி உள்ள இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X