எல்லா கடவுளும் ஒன்னுதான்.. 10 வருஷமா சாப்பிடுறதுக்கு முன்னாடி இதை பண்ணுவேன்..விஷால் பேச்சு!

சென்னை: பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ரத்னம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஷால், நான் சம்பாதித்தேன் என்பதைவிட என்னை சம்பாதிக்க வைத்த சாமி நீங்கள். இந்த இடத்தில் என்னை நிற்கவைத்த சாமி தான். எனவே எனக்கு எல்லாக் கடவுளும் ஒன்னுதான் என்று விஷால் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஷால் இணைந்துள்ளார். விஷாலின் 34வது படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துதுதுள்ளார். கார்த்திக் கே சுப்பராஜ் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் 26ந் தேதி வெளியாக உள்ளது.

Actor Vishal speech at Rathnam audio launch event

நடிகர் விஷால்: இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய விஷால், இந்த படத்தில் இருக்கும் பாடல் போல Don't Worry Da Machi, அனைவருக்கும் கஷ்டம் வரும் ஆனால், அதற்கு ஏற்றமாதிரி நல்லதும் நடக்கும் இதனால் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று பேசினார். இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் கலந்து உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவன் கேட்ட கேள்வி:அப்போது ஒரு மாணவன், நீங்கள் சாப்பிடுவதற்கு முன் கடவுளை வணங்கியது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஷால் தனது கழுத்தில் இந்து, முஸ்லிம் என அனைத்து மதத்தின் கயிறும் உள்ளது. இப்போது இல்லை கடந்த பத்து வருஷமாகவே சாப்பிடுவதற்கு முன் இதைத்தான் செய்து வருகிறேன். அனைத்து கடவுளும் எனக்கு ஒன்று தான் என்பதால் அதை நான் செய்து வருகிறேன். இதை நான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக செய்யவில்லை.

எல்லாரும் சாமி தான்: எல்லாருமே என் சாமிகள் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் இத்தனை சாமிகள் தான், நான் சாப்பிடும் சாப்பாடு, போடும் துணி, ஷூ என அனைத்தையும் இந்த சாமிகள் எனக்கு கொடுத்து இந்த இடத்தில் என்னை நிற்க வைத்து அழகு பார்க்கிறார்கள். இதனால், நான் சாப்பிட்டதை ட்ரோல் செய்பவர்கள் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் அதற்கு எதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று விஷால் பேசினார்.

ஆக்ஷன் படம்: இதையடுத்து பேசிய இயக்குநர் ஹரி, இந்த படத்தை பற்றி நான் சொல்வது என்றால் அது சரியான ஆக்ஷன் படம். நான் விஷாலுடன் இரண்டு படம் பண்ணி இருந்தாலும் இது ஒரு சரியான படம். சாமி, சிங்கம் படம் போன்று ஆக்சன் பட எனர்ஜி இந்த கதைக்குள் இருக்கிறது. ரொம்பவே வந்துள்ளது. எனக்காக 20 நாட்களில் தாமிரபரணி விஷாலாக வந்து நின்றார் என்று இயக்குநர் ஹரி நிகழ்ச்சியில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X