50 அடி உயரத்தில் இருந்து குதித்த விஷால். எனிமி படத்துக்காக துபாயில் செய்த சாகசம்.வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகி வருகிறது.

இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக துபாயில் 50 அடி உயரத்தில் இருந்து விஷால் குதித்துள்ளார்.

தற்போது அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து குதிக்க தயாராகும் முன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சக்ரா

சக்ரா

கடந்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, ரோபோ சங்கர் மற்றும் கே.ஆர். விஜயா உள்ளிட்டோர் நடிப்பில் சக்ரா திரைப்படம் வெளியானது. நீண்ட போராட்டங்களுக்கு பிறகு வெளியான சக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.

மீண்டும் ஆர்யாவுடன்

மீண்டும் ஆர்யாவுடன்

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்திருந்தனர். அதன் பிறகு தற்போது எனிமி படத்திற்காக மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இருமுகன் இயக்குநர்

இருமுகன் இயக்குநர்

அரிமா நம்பி, நோட்டா மற்றும் இருமுகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷாலின் எனிமி படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான இவர் அவரை போலவே பிரம்மாண்டமாகவே படங்களை இயக்கி வருகிறார். எனிமி படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது.

மிருணாளினி தான்

மிருணாளினி தான்

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ், சாம்பியன், எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது எனிமி படத்திலும் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

50 அடி உயரத்தில்

50 அடி உயரத்தில்

இந்நிலையில், தற்போது இந்த படத்திற்காக பிரத்யேக ஸ்டண்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில், நடிகர் விஷால் துபாயில் உள்ள 50 அடி உயர அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக தயாராகி இருக்கும் நிலையில், எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டும் தற்போது படக்குழு வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

இரும்புத்திரை, சக்ரா என டெக்னாலஜி சார்ந்த படங்களாக நடித்து வரும் விஷாலுக்கு, இந்த படம் மேலும், மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் அல்லது டிரைலரில் விஷால் குதிக்கும் அந்த காட்சி இடம்பெற்றாலே அது வேற லெவலில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலின் இந்த சாகசத்தை காணவே ரசிகர்கள் நிச்சயம் தியேட்டருக்கு வருவார்கள் என்பது தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X