Vishal - அந்த மாதிரி படத்தை பார்த்ததற்கு அப்பாவின் ரியாக்ஷன் இதுதான்.. விஷால் ஓபன் டாக்
சென்னை: Vishal (விஷால்) அந்த மாதிரி படத்தை பார்த்ததை கண்டுபிடித்த தனது தந்தை என்ன ரியாக்ஷன் கொடுத்தார் என்பது குறித்து விஷால் பேசியிருக்கிறார்.
தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் விஷால் கடைசியாக ஒரு ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இதன் காரணமாக ஒரே ஒரு ஹிட் கொடுத்துவிட மாட்டோமா என்று ஏங்காத குறையாக இருக்கிறார். கடைசியாக அவர் நடித்த லத்தி படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்தச் சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார் விஷால்.

மார்க் ஆண்டனி: இந்தப் படத்தில் விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். டைம் ட்ராவலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமாவது ஹிட் படமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அவர்.
தொடர் ஹிட்டுகள்: தற்போது ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் விஷால் தான் அறிமுகமான புதிதில் தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்தவர். செல்லமே, திமிரு, சண்டக்கோழி, தாமிரபரணி என அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என கணிக்கப்பட்டது. அதேபோல்தான் வந்துகொண்டும் இருந்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட சறுக்கலிலிருந்து இன்னும் அவர் எழவே இல்லை.
மார்க் ஆண்டனி: இந்தச் சூழலில் மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸுகு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் விஷால் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். அப்படி அவர் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவரிடம் நீங்கள் அந்த மாதிரி படங்களை பார்த்து வீட்டில் மாட்டியிருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.
விஷால் பதில்: அதற்கு பதிலளித்த விஷால், "ஆம் மாட்டியிருக்கிறேன். வீட்டில் யாரும் இல்லாதபோது அந்தப் பட கேசட்டை வாடகைக்கு எடுத்து நானும் நண்பர்களும் பார்த்தோம். பிறகு அந்த கேசட்டை ஒரு கபோர்டில் வைத்துவிட்டேன். அப்பா வெளியிலிருந்து வந்த பிறகு உள்ளே சென்றுவிட்டு ஹாலுக்கு வந்தார். அப்போது அவரது கையில் ஒரு கேசட் இருந்தது. எனது முன்பு அந்த கேசட்டை ஆட்டிக்கொண்டே என்னை பார்த்தவாறு நின்றார்.
எதுவுமே பேசவில்லை. நானும் ஒன்றும் தெரியாததுபோல் இருந்தேன். பிறகு உள்ளே சென்று அந்த கபோர்டில் பார்த்தால் கேசட் இல்லை. சரி அந்த கேசட்தான் இது என்று உறுதி செய்துகொண்டேன். டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தபோது டியூஷன் எத்தனை மணிக்கு என்று கேட்டார். நான் 8 மணிக்கு என்று சொன்னேன். சரி என்று சொல்லிவிட்டு அந்த கேசட்டை அங்கேயே வைத்துவிட்டு எதுவுமே சொல்லாமல் போய்விட்டார். அந்த அமைதிதான் என்னை மாற்றியது" என்றார்.


Click it and Unblock the Notifications











