‘மார்க் ஆண்டனி’ லஞ்சம் கொடுத்த விவகாரம்.. மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த விஷால்!
சென்னை: சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சத்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே ஆர்யா, அபிநயா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழியில் வெளியான இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரி குவித்து வருகிறது.
நடிகர் விஷால்: நடிகர் விஷால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், மார்க் ஆண்டனியின் இந்தி டப்பிங்கிற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும், தணிக்கை குழு 6 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாகவும், சினிமாவில் ஊழல் காட்டப்படலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் கூடாது என்றும் குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஊழல் கூடாது என்றும் தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கை: விஷாலின் இந்த புகார் இந்திய சினிமா உலகையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, இதில் யாரேனும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். இதுகுறித்து விசாரிக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமருக்கு நன்றி: இந்நிலையில், நடிகர் விஷால், சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த ஊழல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுத்ததற்காக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நன்றி.
நேர்மையான பாதையில் தேசம்: ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும், தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.பிரதமருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னைப் போன்ற சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தி உணர்வைத் தருகிறது என விஷால் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











