6 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஷால்!

சென்னை: விஷால் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் பொதுவாக இருக்கும்

நகரத்து இளைஞன் கிராமத்து இளைஞன் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அடித்து தூள் கிளப்ப கூடியவர் விஷால்

இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைத்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்

தயாரிப்பாளராக

தயாரிப்பாளராக

தமிழ் சினிமாவின் அதிரடி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். விஷாலின் திரைப்படங்களில் ஆக்சன் காட்சிகளில் மிக அதிகமாகவே இருக்கும். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறார் கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான எனிமி மிகப்பெரிய வெற்றிபெற்றது எனிமி படத்தில் விஷால் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாகவும் நடித்து பட்டையை கிளப்பி இருந்தனர்.

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

புது புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ள விஷால் அடுத்ததாக குறும்பட இயக்குனர் து பா சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார்

தெலுங்கு மொழிகளிலும் டப்பிங்

தெலுங்கு மொழிகளிலும் டப்பிங்

விஷால் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் பாக்ஸ் ஆபீசை கலக்கி வருகிறது எனவே விஷால் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் தெலுங்கு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதேபோல தற்போது உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது

முரட்டுத்தனமான கிராமத்து

முரட்டுத்தனமான கிராமத்து

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் விஷால் முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக நடித்த திரைப்படம் மருது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார். தேனி மற்றும் மதுரை மக்களின் மண் மனத்தை தனது ஒவ்வொரு படங்களிலும் பதித்து வரும் முத்தையாவுக்கு தொடர்ந்து திரைப்படங்கள் வெற்றி பெற்று வருகிறது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி

இயக்குனர் முத்தையா இப்பொழுது கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் விருமன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த நிலையில் விஷால் மற்றும் முத்தையா கூட்டணி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைய உள்ளது இப்படத்தின் முதல் கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இருக்க இதனை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. விஷால் இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X