காசிக்குப் போகும் சந்நியாசி..திடீரென காசிக்குப்போன விஷால்..என்ன விஷயமாக இருக்கும்!
சென்னை : நடிகர் விஷாலும், அபிநயாவும் திருமணம் செய்து கொண்டதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் வேகமாக பரவிவரும் நிலையில், விஷால் காசிக்கு சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படங்களும் திரையரங்கில் சரியாக ஓடவில்லை.
இதனால், அடுத்து ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். விஷால், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் லத்தி டீசர் மற்றும் டிரைலர் வெளியான நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது.

4 மொழிகளில்
வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள லத்தி படத்தை ராணா மற்றும் நந்தா தயாரித்து உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டபோதிலும் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

திருமண கிசுகிசு
லத்தி படத்தைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி என்கிற படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். இத்தனை நாள் முரட்டு சிங்கிளாக இருந்த விஷாலுக்கு, மார்க் ஆண்டனி படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை அபிநயாவுடன் திருமணம் நடந்து விட்டதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டன.

உண்மையில்லை
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அபிநயா, மார்க் ஆண்டனி படத்தில் நானும் விஷாலும் கணவன், மனைவியாக நடித்து வருகிறேன். அந்த புகைப்படங்கள் தான் சோஷியல் வெளியாகி சர்ச்சையாகி விட்டது. நிஜமாகவே எங்களுக்கு திருமணமாகி விட்டது போன்ற வதந்திகளை கிளப்பி விட்டார்கள் இது உண்மை இல்லை என்று விளக்கம் கொடுத்தார். இதனையடுத்து விஷால் அபிநயா திருமணம் வதந்தி முடிவுக்கு வந்தது.

கங்கை நீரை பூஜை செய்தேன்
இந்நிலையில்,நடிகர் விஷால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசிக்கு சென்றுள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும், அன்புள்ள மோடி ஜி, அற்புதமான தரிசனம், பூஜை செய்து கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதுவா இருக்குமோ
நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினர் பெனாரஸ் தெருக்களில் உள்ள கோவில்களிலும் சாமி தரிசனம் செய்தனர்.விஷாலின் இந்த திடீர் பயணத்தில், விஷாலின் நெருங்கிய நண்பரும், அடுத்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான நடிகர் நந்தா உடன் இருந்தார். விஷாலுக்கு திருமணமாகி விட்டதாக கிசு கிசு பேச்சு அடிபட்டு வரும் நிலையில் திடீரென காசிக்கு ஏன் சென்றார்.ஒரு வேளை அதுவா இருக்குமோ.. இல்லை இதுவா இருக்குமோ என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











