தூக்கிலிட வேண்டும்… அப்போதுதான் குற்றங்கள் குறையும்.. PSBB பள்ளி விவகாரம் குறித்து விஷால் ஆதங்கம் !

சென்னை : தீயாக பரவி வரும் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Recommended Video

சம்மந்தபட்ட ஆசிரியரை தூக்கிலிடணும் | Actor Vishal Angry statement on PSBB issue

அதில்,PSBB பள்ளி நிர்வாகம் இதுவரை மாணவர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ மன்னிப்பு கேட்கவில்லை.

இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை தூக்கிலிட வேண்டும் அப்போது தான் குற்றங்கள் குறையும் என்று நடிகர் விஷால் ஆவேசமாக தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

பல புகார்கள்

பல புகார்கள்

பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இணையத்தில் பல மாணவிகள் அடுத்தடுத்து புகார்களை அடுக்கி வருகின்றனர். போலீஸ் அளித்த உதவி எண்ணுக்கு 30 மாணவிகள் வரை பத்மா சேஷாத்ரி பள்ளி குறித்து புகார் அளித்துள்ளனர்.

ஹார்ட் டிஸ்க் பறிமுதல்

ஹார்ட் டிஸ்க் பறிமுதல்

ராஜகோபாலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அம்பலமாகி உள்ளது. மேலும் ராஜகோபாலனின் ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல மாணவிகளின் புகைப்படங்கள் இருந்துள்ளன. இதேபோல அவரின் வாட்ஸ் ஆக் சாட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பள்ளியை மூடவேண்டும்

பள்ளியை மூடவேண்டும்

இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது ஆதங்கத்தை கூறிவருகின்றனர் அந்த வகையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், PSBB இன் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. இப்பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைக்கிறது, பாதிக்கப்பட்ட மாணவர்களிடமோ பெற்றோரிடமோ ஒருவரும் மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கேட்டுக்கொள்கிறேன்.

தூக்கிலிட வேண்டும்

தூக்கிலிட வேண்டும்

இதை ஒரு சாதிப்பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த நபர் தூக்கிடப்பட வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும். குறைந்தது மாணவியிடம் பெற்றோரிடமாகவது மன்னிப்பு கேளுங்கள் இதை சாதிப்பிரச்சினையாக மாற்றாதீர்கள் என்று நடிகர் விஷால் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X