விஜய் படத்தில் நடிக்க முடியாதுன்னு சொன்ன விஷால்.. ஆனால், விஷால் படத்தில் இப்போ விஜய் நடிக்கிறாரா?

சென்னை: நடிகர் விஷால் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் விஜய் ரசிகர்களை பயங்கர குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷாலிடம் தான் முதலில் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், விஷால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய் படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் விஜய் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor Vishal tweeted Thalapathy Vijay for Mark Antony stuns fans

மார்க் ஆண்டனியை நம்பும் விஷால்: நடிகர் விஷால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளியான அரை டஜன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படு சொதப்பலாக அமைந்தன. ஆனாலும், தொடர்ந்து தனது விடா முயற்சியை வெளிப்படுத்தி வருகிறார் விஷால்.

கடைசியாக அவர் மிகவும் நம்பி நடித்த லத்தி படமும் லாஸ் ஆனது. இந்நிலையில், தற்போது நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை கொண்டிருக்கிறார் விஷால்.

லியோவுக்கு நோ சொன்ன விஷால்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கதிர், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்து வரும் லியோ படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஷாலிடம் தான் லோகேஷ் அணுகினார்.

மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த நிலையில், இந்த படத்தில் விஷால் நடித்தால் சரியாக இருக்கும் என நினைத்தார். ஆனால், விஜய்யின் தீவிர ரசிகராக இருந்தாலும், நடிகர் விஷால் அந்த வாய்ப்பை கால்ஷீட் பற்றாக்குறை காரணமாக வேண்டாம் எனக் கூறியது விஜய் ரசிகர்களை மட்டுமின்றி விஷால் ரசிகர்களையும் ஷாக் ஆக்கியது.

விஷால் படத்தில் நடிக்கிறாரா விஜய்: இந்நிலையில், தற்போது நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் #ThalapathyVijayforMarkAntony என்கிற ஹாஷ்டேக் உடன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளது.

நடிகர் விஜய் மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்காக நடிக்கப் போகிறாரா? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க விஷால் தலையே சுத்துது என ரசிகர்கள் பலரும் அவரது ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், பாட்ஷாவாக விஜய் கேமியோ ரோலில் நடித்தால் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.

அதெல்லாம் இருக்காது மார்க் ஆண்டனி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் வரப் போகிறார் அதனை தான் விஷால் இப்படி சொல்லியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Actor Vishal tweeted Thalapathy Vijay for Mark Antony stuns fans

மார்க் ஆண்டனி டீசரை வெளியிடும் விஜய்: ஆனால், விஷாலின் இந்த ட்வீட்டுக்கான உண்மையான காரணம் இன்று வெளியாக உள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை நடிகர் விஜய் வெளியிடப்போகிறார் என்பது தான் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பஹீரா திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், மார்க் ஆண்டனி படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X