Vishal: கடவுள்கிட்ட சரணடைஞ்சிட்டேன்.. திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால்!

சென்னை: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது மார்க் ஆண்டனி படம்.

டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலர் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

Actor Vishal visits to Tirupathi temple for Mark Antony release

நடிகர் விஷால் திருப்பதியில் சாமி தரிசனம்: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. விஷாலின் கடந்த சில படங்கள் அவருக்கு சரியாக கைக்கொடுக்காத நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக காணப்படுகிறது. இந்தப் படம் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளதை பார்க்க முடிகிறது.

நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது மார்க் ஆண்டனி. ஜிவி பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலர் அதிகமான ரசிகர்களை கவர்ந்து மாஸ் காட்டியது. நாளைய தினம் சந்திரமுகி 2 படமும் வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பெரிய படங்களின் போட்டியின்றி சோலோவாக ரிலீசாகவுள்ளது மார்க் ஆண்டனி. சில சிறிய பட்ஜெட் படங்களும் நாளைய தினம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டவர்களும் மார்க் ஆண்டனி படத்தில் இணைந்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்தப் படம் டைம் டிராவலையும் இணைந்து உருவாகியுள்ளது. இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில், மிகப்பெரிய ஹிட்டை ட்ரெயிலர் பெற்றுள்ளது. யூடியூபிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் விஷாலுக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத்திரை படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என அடுத்தடுத்த 7 படங்கள் தோல்வியடைந்த நிலையில் மார்க் ஆண்டனி சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க் ஆண்டனி படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது திருப்பதியில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார். அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது ட்ரெண்டாகியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தது. இதையடுத்து விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து நாளைய தினம் படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள விஷால், அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இறுதியில் சாமியிடம்தான் அனைவரும் சரணடைவார்கள் என்றும் அவரது ஆசிர்வாதம் தேவை என்றும் அதனால்தான் திருப்பதிக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்குள் நடிகர் சங்க கட்டிட பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X