புனித் ராஜ்குமார் படத்துக்கு விஷால் மரியாதை … குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் !

பெங்களுர் : நடிகர் விஷால் புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

புனித் ராஜ்குமாரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கன்டீரவா மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்

கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் (வயது 46). ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த 29ந் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குடும்பத்தினருக்கு ஆறுதல்

குடும்பத்தினருக்கு ஆறுதல்

இந்நிலையில், இன்று புனித் ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்ற விஷால் அங்கு அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். புனித் ராஜ்குமார் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். இந்தப் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷால் புனித் நம்மோடு இல்லை என்பதை இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

தூக்கம் வரவில்லை

தூக்கம் வரவில்லை

புனித் ராஜ்குமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நினைவஞ்சலிக் கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஷால், புனித் ராஜ்குமார் குறித்து உருக்கமாக பேசினார். அவரது மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவில்லை என்றார். மேலும், புனித்தின் இறப்புக்கு பிறகு 2 நாட்கள் எனக்கு தூக்கம் வராமல் மனம் பதைபதைத்ததாக கூறினார்.

கல்விக்செலவை

கல்விக்செலவை

கடந்த சில தினங்களுக்கு முன், புனித் ராஜ்குமார் படிக்க வைத்த 1800 குழந்தைகளில் கல்விச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக விஷால் கூறி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X