விஜய்யை தொடர்ந்து விஷாலுக்கு வந்த ஆசை.. சட்டமன்ற தேர்தல்தான் இலக்கா?

சென்னை: சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவது இயல்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என பலரும் அரசியல் கட்சி தொடங்கினார்கள். தற்போது விஜய் அரசியலில் குதித்துள்ள நிலையில், நடிகர் விஷால் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்படும் விஜய் பிப்ரவரி 2ந் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்கிற, அவரது அரசியல் கட்சியை அறிவித்திருந்தார். அது மட்டுமில்லாமல் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்காமல், 2026ம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், அதன்பின் திரையுலகிலிருந்து முழுவதுமாக விலகி முழு நேர அரசியல்வாதியாக ஈடுபட போவதாகவும் அந்த அறிக்கையில் விஜய் கூறியிருந்தார்.

Actor vishal will start a political party soon

விஜய்யின் அரசியல் வருகை மகிழ்ச்சி அளித்தாலும், சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் கூறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் அன்பு வேண்டுகோள் வைத்து வருகின்றனர். ஆனால், சிலர் அரசியலுக்கு பின் சினிமாவில் இருந்து விலகும் முடிவை பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் மக்களுக்காக சினிமாவைவிட்டு விலகுவது பாராட்டுக்குரியது என்று நெட்டிசன்கள் விஜய்யை புகழ்ந்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் என்கிற அவரது ரசிகர் மன்றமே தற்போது கழகமாக மாறி உள்ளது. விஜயின் அரசியல் கட்சிக்கு தேவையான நிர்வாகிகளும் அமர்த்தப்பட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

நடிகர் விஷால்: விஜய் கட்சி தொடங்கியதைத் தொடர்ந்து, நடிகர் விஷாலும் விரைவில் அரசியலில் களமிறங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனது ரசிகர்கள் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் என மாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களில் பொறுப்பாளர்களையும், பூத் கமிட்டிகளுக்கான வேலையும் அவர் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டமன்ற தேர்தல் இலக்கு: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவிருக்கும் இந்த நேரத்தில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அவரது கட்சி பெயரையும் உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பையும் விஷால் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் 2026-ம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் இலக்கு என்று அறிவித்துள்ளதால், விஷாலும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்நிறுத்தியே காய்களை நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் ஆசை: நடிகர் விஷால், கட்சியை தொடங்காமலேயே 2017ஆம் ஆண்டு ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சில காரணங்களால் இவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனால் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த விஷால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தற்போது, விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், நடிகர் விஷாலுக்கு அரசியல் ஆசை வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X