Rathnam Box Office Collection: விஷாலின் ரத்னம்.. எப்படி இருக்கு.. முதல் நாள் வசூல் விவரம்!
சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நடிப்பவர் தான் நடிகர் விஷால். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளியது. அந்த படத்தில் பலவிதமான கெட்டப்பில் எஸ்ஜே சூர்யாவும் விஷாலும் இறங்கி நடித்திருந்தார்கள். அவர்களின் கடுமையான உழைப்பு ஏற்ப படம் தியேட்டரில் வசூலை அள்ளியது.

விஷாலின் ரத்னம்: அந்த படத்தை தொடர்ந்து, ஹரி இயக்கத்தில் விஷால் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஷால். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
அதிரடியான கதை: சிறுவயதிலேயே அம்மாவை இழந்த ரத்னம் (விஷால்) எம்.எல்.ஏவாக இருக்கும் சமுத்திரகனியிடம் ஆடி ஆளாக வேலை செய்கிறார். தன் மீது அம்பு காட்டும் சமுத்திரக்கனிக்காக அடிதடி, பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறார் விஷால். இந்த நேரத்தில் பிரியா பவானி ஷங்கர், ஒரு தேர்வு விஷயமாக வேலூர் வருகிறார். ஆனால், அவரை கொல்ல ரவுடிகள் திட்டம்போடுகின்றனர். ஆனால், அவரை சந்தித்த விஷால், அவர் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார்.
என்ன காரணம்: அதுமட்டுமில்லாமல், பிரியா பவானி ஷங்கருக்கு எப்போது எல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போது எல்லாம் துணை இருந்து காப்பாற்றுகிறார். பிரியா பாவனி சங்கர் மீது அவர் கொண்டிருக்கும் அன்புக்கு என்ன காரணம்? பிர்யாவை வில்லன்கள் கொல்லத் துடிப்பது ஏன்? என்பதுதான் ரத்னம் படத்தின் மீதி கதை. அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை அசத்தி இருக்கிறார் விஷால்.
ஹரி படம் போல இல்ல: ஆனால், படம் பார்த்த ரசிகர்கள் பலர், படம் ஹரியின் படம் போலவே இல்லை என்றும், ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே சண்டை சண்டையாகத்தான் இருந்தது என்று கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும்,.அடிதடி ரவுடி ஹீரோ, அன்பு கொண்ட பெண்ணுக்காக வில்லன்களை எதிர்ப்பது,நகைச்சுவை என்ற பெயரில் யோகிபாபுவின் உருவக்கேலி செய்வது தான் இருந்தது என்று கூறிவருகின்றனர். ஒரு சிலர் படம் குறித்து நல்ல விமர்சனத்தை வைத்தனர். இப்படம் ரத்னம் படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
முதல் நாள் வசூல்: ரத்னம் படம் உலகம் முழுவதும் நேற்று வெளியான நிலையில் படம், தமிழ்நாட்டில் 4 கோடியும், கேரளாவில் 12 லட்சமும், கர்நாடகாவில் 45 லட்சமும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரு கோடியே 75 ரூபாயும், இந்தியாவில் மட்டும் இத்திரைப்படம் 6 கோடியே 42 லட்சத்தை வசூலித்துள்ளது. மொத்தத்தில் இப்படம் உலகம் முழுவதும் 7 கோடியே 52 லட்சத்தை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், படம் மேலும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











