Actor Vishal: அடுத்த வெற்றிக்கு தயாராகும் விஷால்.. ரத்னம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகர் விஷால் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் விஷால் இணைந்துள்ள படம் ரத்னம். தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து ரத்னம் படத்தில் மூன்றாவது முறையாக விஷால் -ஹரி கூட்டணி இணைந்துள்ளது. இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ள நிலையில், படத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, கவுதம் மேனன் ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. படத்தின் இசையை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். இயக்குநர் ஹரியுடன் இவர் 6வது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளார்.

Actor Vishals Rathnam movie release date announced

நடிகர் விஷால்: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த நிலையில் டைம் டிராவலை மையமாக கொண்டு படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தன்னுடைய 34வது படத்தில் இயக்குநர் ஹரியுடன் இணைந்து நடித்து முடித்துள்ளார் விஷால். இந்தப் படத்திற்கு ரத்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து விஷால் -ஹரி கூட்டணி இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

ரத்னம் படம்: ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான இந்த வீடியோ படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் ஹரியுடன் அவர் 6வது முறையாக இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்னம் ரிலீஸ் தேதி அறிவிப்பு: இந்த அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் விஷால், படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த விஷால், ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது மிகச்சிறந்த உற்சாகத்தை அளித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். படத்தின் சூட்டிங் தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, திருப்பதி, வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். ஆக்ஷன் படங்களை விரும்புபவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும் கூறியிருந்தார்.

விஷால் -பிரியா பவானி சங்கர் ஜோடி: படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர் முன்னதாக ஹரி -அருண் விஜய் கூட்டணியில் வெளியான யானை படத்திலும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, கவுதம் மேனன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள விஷால் அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X